Essay K.kanapathipillai
ஈழத்துத் தமிழாய்வுத்துறையில் பேராசிரியர் கணபதிப்பிள்ளை முக்கியத்துவப்படுத்திய துறை ஈழத்தமிழர் வரலாறு, ஈழத்தமிழர் வாழ்வியல், மற்றும் ஈழத்தமிழ் இலக்கிய வரலாறு போன்றவையே.ஈழத்தமிழர் வாழ்வியல் – வரலாறு பற்றிய தகவல்களைப் பதிவு செய்வதையும் அவர் பிரதானமாகக் கொண்டிருந்தார்.
‘ஈரத்து வாழ்வும் வளமும்’ (1962) என்னும் அவருடைய கட்டுரைத்தொகுப்பு மிக முக்கியமானது.‘’அக்காலத்தில் (1956) கொந்தளித்துகிளம்பிய சிங்களம் மட்டும் கோஷத்தின் பின்புலத்தில் தமிழர் வரலாற்றை பின் தள்ளும் சிங்கள வரலாற்றா சிரியர்களின் (பேராசிரியர் பரணவித்தாரண போன்ற சிலர்) புலமை முயற்சிகளுக் கெதிரான தமிழ் நிலை பதிலாகவே இம்முயற்சிகள் அமைந்தன’ (பேராசிரியர் சிவத்தம்பி)வடமராட்சி பருத்தித்துறையைச் சேர்ந்த தம்பளையில் தமிழ் வைத்தியராகப் பெயர்பெற்ற கந்தசாமிப்பிள்ளையின் மகனாக 2.07.1903ல் பிறந்தவர் கணபதிப்பிள்ளை.
பருத்தித்துறை முத்துசாமிக் குருக்களிடம் மரபுத்தமிழையும் சமஸ்கிருதத்தையும் கற்க அவரது தந்தையார் ஒழுங்குகளைச் செய்திருந்தார். திண்ணைப் பள்ளி வழிவந்த மரபுக்கவிஞராகவும் மாற்றியது. பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் விரிவும் ஆழமும் கொண்ட ஆங்கிலக்கல்வியுடன் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்லூரியில் தனது கலைமாணி பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார் (1927) தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளை தெரிவு செய்து பாளியையும் சமஸ்கிருதத்தையும் பேராசிரியர் ஜி.பி. மல்ல சேகர மற்றும் றம்புக்வெல சித்தார்த்ததேரர் ஆகியோரிடத்தும் தமிழை சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகன் அழகசுந்தர தேசிகரிடமும் கற்றுத் தேர்ந்ததார்.
ஆரம்பத்திலேயே தமிழையும் சமஸ்கிருதத்தையும் முத்துசாமி குருக்களிடம் கற்ற அனுபவ விளைவு பல்கலைக்கழக கல்விக்கான அறுவடைகளாயிற்று. கலைமாணி பரீட்சையில் முதல்தர உன்னத சித்திபெற்று (1930) நான்காண்டுகள் வெளிநாட்டில் படிக்க புலமைப்பரிசு பெற்று சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகள் பயின்று கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.1936ல் இலங்கை வந்து பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாலுர் ஆனார். விரிவுரையாளராகவும் தமிழ்த்துறையின் தலைவராகவும் பத்து நீண்ட ஆண்டுகள் பணியாற்றி 1947ல் பேராசிரியர் நியமனம் பெற்றார்.பல்கலைக்கழகத் தமிழ்க் கல்விக்குப் பலமான அடித்தளம் அமைத்த பெருமைக்குரியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
சாசனவியல், மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என அறிவியல் ஆய்வறிஞராகவே பட்டங்கள் பெற்று பேராசிரியர் பதவிவகித்தாலும், ஆக்க இலக்கியம்,படைப்பு, அரங்கில் என அவாவுற்றிருந்தவர் அவர்.ஒரு மரபுக்கவிஞராகி செய்யுள்கள் இயற்றி, கவிகள் யாத்து இரண்டு கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். காதலியாற்றுப்படை, தூவுதும் மலரே, ஆசிய இரண்டும் மரபுக்கவிதைகள் கொண்ட தொகுதிகள். விந்தை முதியோன், சீதனக் கதை முதலிய நெடும்பாடல்கள் கொண்ட தொகுதி ‘தூவுதும் மலரே’ பேராசிரியர் கைலாசபதி பதிப்பித்த நூல் இது என்கின்றார் மூதறிஞர் சொக்கன்.
பிறமொழி நாவல்களின் தமிழ் வடிவமாக இரண்டு நாவல்களையும் ஒரு சிறுவர் இலக்கிய நூலையும் ஆக்கித் தந்துள்ளார் இந்தப் பேராசிரியர்
பூஞ்சோலை (1953). இது ஒரு ஜெர்மனிய நாவல் உணர்வுபூர்வமான காதல் நினைவுக் கதை இது.வாழ்க்கையின் விநோதங்கள் (1954) பிரெஞ்சு நாவல் இது. வறுமையில் வாடிய இரு சகோதரர்கள் பற்றி நாவல் இது. ஜெர்மனிய சிறுவர்கதைகளின் தமிழ்வடிவத்தொகுப்பு “நீராமங்கையர்”.ஆய்வுப் புலமையாளர் ஒருவரின் ஆக்க இலக்கியப்பணிகள் இவை.பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பெயரையும் புகழையும் என்றும் நிலைபெறச் செய்யும் வல்லமை கொண்டவை அவர் எழுதி மேடையேற்றிய அவருடைய நாடகங்கள்.
அவர் விரிவுரையாளராகப் பதவியேற்ற 1936லிருந்தே பல்கலைக்கழக விழாக்காலங்களின் மேடையேற்றத்துக்காக அவரே நாடகங்கள் எழுதி. தயாரித்து மேடையேற்றி வந்துள்ளார். பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி வெளியேயும் பிரதான நகரங்களிதும் இவை அரங்கேறியுள்ளன.1936 கண்ணன் கூத்து, 1941நாட்டவன் நகர வாழ்க்கை. 1948பொருளோ பொருள். 1950முருகன் திருகுதாளம், 1952சங்கிலி, 1954தவறான எண்ணம், உடையார் மிடுக்கு ஆகிய இரு நாடகங்கள். 1955சுந்தரம் எங்கே. 1956துரோகிகள் போன்றவை அவருடைய நாடகங்கள்.
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கிலான உரையாடல்கள், யாழ்ப்பாண வாழ்வியல்களை மையக்கருத்தாகக் கொண்டிருத்தல். தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசியல் நெருக்கடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருதல் போன்றவைகளை தன்னுடைய நாடகங்களில் முக்கியப்படுத்தியவர் இவர். அரசியல் நாடகங்களை ஒரு துணிவுடன் மேடைக்குக் கொண்டு வந்த பெருமைக் குரியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை.
பணம், பதவி, அந்தஸ்து, உடையவர்களின் அநாகரீகமான மிடுக்குகளை அரசங்கிலேற்றிய பிரபல்ய மிக்க நாடகம் உடையார் மிடுக்கு. சமூகவிமர்சனங்களாகவே திகழ்பவை இவருடைய நாடகங்கள்.சமூக முக்கியத்துவம் கொண்டமேலோர் வட்டம் இவரை ஒரு பகையாளியாகவே பார்த்தது என்பது தவிர்க்க முடியாததே.1965ல் ஓய்வு பெற்ற பேராசிரியர் கணபதிபிள்ளை 12.05.1968ல் அமரர் ஆனார்.
*********************************
=====================
kidhours-upcoming
covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit