LED விளக்குகளைக் கண்டுபிடித்த ஜப்பானிய விஞ்ஞானி இசாமு அகஸாகி(92) (Isamu Akasaki) காலமானார்.
தற்போது எல்இடி விளக்குகள் இல்லாத வீடே இல்லையென்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் தற்போது அந்த விளக்குகளை கண்டுபிடித்தவ விஞ்ஞானி இசாமு அகஸாகி உயிரிழந்துவிட்டார்.
இவர், கடந்த 2014ஆம் ஆண்டு, இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றார். அவரது எல்இடி விளக்கு, அறிவியல் துறையில் புரட்சிகரமான ஒரு கண்டுபிடிப்பு என கருதப்படுகிறது. எல்இடி விளக்குகள், குறைந்த மின்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான மணி நேரம் எரியக்கூடியவை.
வறுமைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் எதிரான போராட்டத்தில், அந்த விளக்குகள் உலகம் முழுவதும் கணிசமாகப் பங்கினை பெற்றுள்ளன. இந்த நிலையில் விஞ்ஞானி இசாமு அகஸாகிவுக்கு திடீரென உடல்நிலை ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு நிமோனியா உறுதியாது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டப்போதும் அவை பலன் அளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.