International children’s day
ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1856 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.
எனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். 10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில் 56 சதவீதமானவர்கள் சிறுமிகளாக உள்ளனர்.
ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றனர். உலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதமானவர்ள் மந்த போசனத்தினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியாலன துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய வன்முறைகளில் நம் நாட்டு சிறுவர்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.
உலக சிறுவர் தினம் ஆங்கில வாழ்த்து கவிதைகள்
உலக சிறுவர் தினம் ஆங்கில சிறு கட்டுரை
உலக சிறுவர் தினம் ஆங்கில பேச்சு
இதேவேளை, பாடசாலை முறைமையினுள் சிறுவர்களுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான தண்டனைகளை 2020இல் முழுமையாக ஒழிப்பதை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘உண்மையான மாற்றத்தை நோக்கி’ என்ற நடைபவனி நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறுவர் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான அமைப்பினால் இந்த நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, உலகளாவிய ரீதியில் இலங்கை உட்பட 131 நாடுகள் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன.
சிறுவர்களுக்கெதிரான கொடூரமான தண்டனைகள் அவர்கள் மத்தியில் உள ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், இளமைப் பருவத்திலும் அதனால் அதிகளவு தாக்கம் ஏற்படுகின்றமை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம் விளங்குகின்றது.
சிறுவர்துஷ்பிரயோகம் என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.
இவ்வாறான உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பத காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது. மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட அனைவரையும்சிறுவர்கள் என வரையறுத் துள்ளது.சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.
ஆனால் இன்றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்
* உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.
* உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.
* பாலியல்ரீதியான துஷ்பிரயோகம்.
* உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.
* புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.
குறிப்பாக உலகில் உள்ள அனைத்துசிறுவர்களும் இவற்றுள் ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தேவருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற் கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்றநிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
மேற்படி அனைத்து நிறுவனங்களினதும்சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர்தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில்எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியதுஅவசியமாகும்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.