அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைகழகத்தைச் சார்ந்த பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் பூச்சிகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். ஆராய்ச்சியின் தலைவராக செயல்பட்ட வில்லியம் ரோமோசர் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் ரோவர் மூலம் பூச்சிகள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வில்லியம் கூறியுள்ளார். தேனீ, வண்டு போன்ற உயிரினங்கள், ஊர்வன ஆகியவற்றின் படிமங்கள் தெரிவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவே தெரிகிறது.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இருக்கும் அறிவியல் உலகத்துக்கு இந்த ஆய்வு ஒரு பெரும் அணுகூலமாகவே பார்க்கப்படுகிறது