சுனாமி, நிலநடுக்கம் என பல்வேறு இயற்கை சீற்றங்களையும், பேரிடர்களையும் அடிக்கடி சந்தித்து வருகிறது. இந்த வரிசையில் இன்று மீண்டும் இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று ரிக்டர் அளவில் 6.0 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் நகரத்தில் இருந்து தென்மேற்கு திசையில் 45 கிலோமீட்டர் தொலைவில் 82 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், மலாங் நகரத்தை இந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
![இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!#Indonesia earthquake#tamil_news#seithigal 1 tamil_kids](https://www.kidhours.com/wp-content/uploads/2021/04/tamil_kids_news-10.png)
இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் (Pacific Ring of Fire) இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.018ஆம் ஆண்டு சுலாவெசி தீவில் ஏற்பட்ட 7.5 சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதன் விளைவாக எழுந்த சுனாமி அலைகளும் 4,300க்கும் மேலானோரை பலியாக்கின.