இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்து போனது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதேபோல் இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் இன்று ஏற்பட்டது. மேலும் ஜப்பானின் இன்று காலை சிபா பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.