Saturday, February 8, 2025
Homeகல்விஇந்தியாவின் முதல் சைவ நகரம்..!

இந்தியாவின் முதல் சைவ நகரம்..!

- Advertisement -
Indian-pure-saiva-nagaram-kidhours
Indian-pure-saiva-nagaram-kidhours

மனித இனம் உருவான ஆரம்ப காலத்தில், மனிதன் காடுகளில் விலங்குகளை வேட்டையாடி அதை தன் உணவாக உண்டு வாழ்ந்தான். பிறகு ஒருகட்டத்தில் தானியங்களை விளைவித்து அதை உன்ன துவங்கினான். பிற உயிரினங்களை அழிப்பது பாவம் என்பது உணர்ந்து, ஒரு சிலர் அசைவத்தை முழுமையாக தவிர்க்க துவங்கினர். அப்படி சிறு எறும்புகள் கூட தங்களால் மாண்டுவிட கூடாது என்னும் எண்ணம் கொண்ட பலர் இன்றும் ஜெயின் சமூகத்தில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வசிக்கும் ஒரு நகரம் தான் பாலிடான. இந்தியாவில் உள்ள இந்த நகரத்தில் மட்டும் அசைவம் என்பது கிடையாது. அது பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த பாலிடாமா நகரத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எந்த ஒரு விலங்கையும் கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு பின்புலத்தில் ஏராளமான ஜெயின் துறவிகளின் கடும் போராட்டம் இருந்துள்ளது. நூற்றிற்கும் மேற்ப்பட்ட ஜெயின் துறவிகள் இங்கு ஒன்று திரண்டு இந்த நகரத்தை சுத்த சைவ நகரமாக அறிவிக்க உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். அதோடு ஒரு சிறு உயிரும் அந்த மண்ணில் கொல்லப்பட்டால் அதற்கு இணையாக ஒரு ஜெயின் துறவின் உயிர் பறிபோகும் என்றும் கூறினார்கள்.

பல கட்ட ஆலோசனைக்கு பிறகு, ஜெயின் துறவிகளின் போராட்டத்திற்கு செவி சாய்த்த அரசு, அந்த நகரத்தில் எந்த விலங்குகளையும் கொள்ளக்கூடாது என சட்டம் இயற்றியது. அதனை தொடர்ந்து அங்கு இருந்த 200கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் இதுவே சுத்த சைவமாக அறிவிக்கப்பட்ட முதல் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு ஒரு கோவில் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

- Advertisement -

ஆனால் இந்த ஊரே கோவில் தான். இங்கு கிட்டத்தட்ட 900 கோவில்கள் உள்ளன. சமணர்களின் புனித தலமாக விளங்கும் இந்த மலை நகரத்திற்கு ஒருமுறையாவது செல்லவேண்டும் என்பது சமணர்களின் விருப்பமாக உள்ளது. சிறு உயிரையும் சமமாக மதிக்கும் இந்த புனித நகரத்திரத்தை நாமும் ஒருமுறை சென்று பார்க்கலாமே.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.