Sunday, January 19, 2025
Homeசிந்தனைகள்சிறுவர்களுக்கு மினரல் வாட்டர் (Mineral Water) கொடுக்கலாமா?... ஏன் கூடாது?

சிறுவர்களுக்கு மினரல் வாட்டர் (Mineral Water) கொடுக்கலாமா?… ஏன் கூடாது?

- Advertisement -
water-bottle-kids-kidhours
water-bottle-kids-kidhours

மினரல் வாட்டர் என்று பரவலாக கிடைக்கப்படும் குடி நீரில் பல்வேறு கனிமங்கள், உப்பு மற்றும் சல்பர் கூறுகள் உள்ளன. பயணங்களின் போதும், வீடுகளில் கிடைக்கும் நீர் குடிக்க முடியாத நிலையில் அசுத்தமாக இருக்கும்போது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

இது ஒரு பாதுகாப்பான குடிநீராக கருதப்படுகிறது. வெயில் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்கும் பல இடங்களில் இந்த மினரல் வாட்டர் அதிக அளவு பயன்பாட்டில் இருக்கிறது.

மினரல் வாட்டர் (Mineral Water)

- Advertisement -

பெரியவர் முதல் குழந்தைகள் வரை மினரல் வாட்டரை பருகி வருகிறோம். ஆனால் குழந்தைகளுக்கு இந்த நீர் பாதுகாப்பானதா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் தீர ஆராய்ந்து பிறகு கொடுப்பது தான் அவர்களின் நலனை அதிகரிக்கும். சில வகை நீரை குழந்தைகள் குடிப்பதால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது. ஆகவே இதனைப் பற்றிய ஒரு தெளிவு நமக்கு கிடைப்பதால் நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

- Advertisement -

சிறுவர்களுக்கு நல்லதா?

சிறுவர்களுக்கு வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கும் போதுமான அளவு திரவ உணவைக் கொடுப்பது அவர்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. திரவ உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு தண்ணீர். குழந்தைகளின் உடல் எடையில் அதிக விழுக்காடு நீரால் நிரப்பப்பட்டது. ஆகவே குழந்தைகளின் உடலை நீர்ச்சத்துடன் பராமரிப்பது மிகவும் அவசியம். பிறந்த குழந்தையின் எடையில் 75% நீரால் ஆனது.

ஆனால் அந்த குழந்தைக்கு ஒரு வயது நிறைவடையும்போது நீரின் விழுக்காடு 65% என்று குறைகிறது. குழந்தைகளின் பற்கள் வளர்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். வளரும் குழந்தைகளின் சிறந்த உணவாக தண்ணீரும் பாலும் கருதப்படுகிறது. எல்லோருக்கும் இருக்கும் பரவலான நம்பிக்கை, குழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பது. ஆனால் இந்த கருத்துக்கு மாறாக, இது குழந்தைகள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கிறது என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம்.

kids with mineral water bottle-kidhours
kids with mineral water bottle-kidhours

ஏன் கொடுக்கக் கூடாது?

போத்தலில் சேமித்து வைக்கும் இந்த நீரில் ப்ளுரைடு உள்ளதாக நம்பப்படுகிறது. ப்ளுரைடு சேர்க்கப்பட்ட சில உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தும், பற்பசையிலும் ப்ளுரைடு உள்ளது. ஆனால் அளவுக்கு மீறிய ப்ளுரைடு உட்கொள்ளல் பற்களின் எனாமலை பாதிக்கிறது. இதனால் ஈறுகளில் சின்னஞ்சிறியதாய் முளைக்கத் தொடங்கும் பற்களில் வெள்ளை திட்டுக்கள் தோன்றும்.

சில போத்தலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் ப்ளுரைடு அளவு குறிப்பிடப்படாமல் இருக்கும். அத்தகைய தருணங்களில் அது மேலும் அதிகரிக்கலாம். மேலும் இந்த நீர் சுத்தீகரிக்கப்பட்டது, அயனி நீக்கப்பட்டது, RO முறையில் தயாரிக்கப்பட்டது என்று கூறலாம். இதனால் ப்ளுரைடு அளவு குறையலாம். ஆனால் இது எதுவும் உறுதியாக தெரிவதில்லை. அதனால் குழந்தைகளுக்கு இந்த நீரை கொடுக்க வேண்டாம்.

யுரேனியம் அளவு

போத்தலில் உள்ள நீரில், நுண் கிருமிகள் ஒழிக்கப்பட்டது என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் இதுவும் உண்மை இல்லை. குழாயில் இருந்து எடுக்கும் தண்ணீரில் உள்ள ஈயத்தின் அளவை விட இந்த நீரில் ஈயத்தின் அளவு குறைந்து காணப்படுகிறது. இதனால் கிருமிகளின் தாக்கம் இந்த நீரில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இதனால் இவை குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. பாட்டில் குடிநீரில் யுரேனியம் அளவு அதிகமாக இருக்கும். இது சிறுநீரகத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். ஆகவே குழந்தைகளுக்கு பால் பவுடருடன் இதனை சேர்க்கும்போது பாதிப்பை உண்டாக்கும் என்பதால் இதனை தவிர்ப்பது நல்லது.

கொதிக்க வைத்தது

சில நேரம் பயணங்களின் போது குழந்தைகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நாம் மினரல் வாட்டரை பயன்படுத்துகிறோம். அப்போது சில விஷயத்தை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம். உங்கள் குழந்தைக்கு ஆறு மாதத்தை விட குறைவாக இருந்தால் இந்த நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து கொடுக்கலாம். குடிக்க கொடுப்பதற்கு முன் அந்த நீரை குறைந்தபட்சம் 70 டிகிரி வெப்ப நிலையில் கொதிக்க வைக்க வேண்டும்.

இதன் மூலம் இந்த நீர் குழந்தைகள் குடிப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு தன்மையைப் பெறுகிறது. அதிக வெப்பம் உள்ள இடங்களுக்கு பயணிக்கும்போது உங்கள் குழந்தைக்கு தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். இந்த சமயத்தில் மேலே கூறிய முறையில் கொதிக்க வைத்து ஆற வைத்து தண்ணீர் புகட்டுவதால் இவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தண்ணீர் பாட்டிலின் லேபிளில் ப்ளுரைடு அளவை கவனியுங்கள். ஒரு லிட்டர் நீரில் சோடியம் அளவு 200 மில்லிகிராம் அளவை விட குறைவாகவும், சல்பேட் அளவு 250மில்லி கிராமை விட அதிகரிக்காமலும் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்தபின் பயன்படுத்தவும். குழந்தைக்கு பால் பவுடரில் கலப்பதற்காக பயன்படுத்தும் நீரை மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.

ஆறு மாத குழந்தைக்கு

ஆறு மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். தாய்பாலில் எல்லா ஊட்டச்சத்துகளும் முழுவதும் இருப்பதால் தண்ணீரின் தேவை கூட இருப்பதில்லை. இந்த கட்டத்தில் நீங்கள் தண்ணீரைக் கொடுக்கும்போது நீர் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும், ஏனென்றால் சிறிய அளவு சிறுநீரகம் தண்ணீர் சுமைகளை நிர்வகிக்க இயலாது. ஆறு மாதத்திற்குப் பிறகு திட உணவுகளை குழந்தைகள் எடுத்துக் கொண்ட பின், ஒரு சிறிய அளவு நீரை அவர்களுக்கு கொடுக்கலாம். இந்த நேரத்தில் குழந்தைக்கு பழச்சாற்றை விட தண்ணீர் நன்மை தரும். பழச்சாற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பது நலம்.

பொதுவாக குழாய் தண்ணீர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து வடிகட்டி குடிக்கலாம். ஆனால் சிறு குழந்தைகள் என்ற வரும்போது, ஒவ்வொரு விஷயத்தையும் நாம் ஆழமாக யோசிக்க வேண்டும். இது அவர்களின் பாதுகாப்பு தொடர்பான நோக்கத்தை பூர்த்தி செய்யும். ஆகவே அவர்களுக்கு வழங்கும் ஓவ்வொரு உணவும் கவனமாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஒரு சிறிய தவறான தேர்வு அவர்களின் வளர்ச்சியை பாதிக்கலாம். இதனால் பல சிக்கல் உண்டாகலாம். ஆகவே நன்கு ஆராய்ந்து பாதுகாப்பான தேர்வை அவர்களுக்கு கொடுங்கள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.