Ian Cyclone Affects உலக காலநிலை செய்திகள்
இயன் சூறாவளியால் மொத்தமாக சேதமடைந்த பாலம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க தீவு ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் சுழன்று தாக்கிய இயன் சூறாவளியால் Sanibel பகுதியை இணைக்கும் ஒரே ஒரு பாலமும் சேதமடைந்துள்ளது.
பாலத்தின் 50 முதல் 65 அடி வரை தண்ணீரில் விழுந்ததால், பாதுகாப்புக்கு எவரும் அங்கிருந்து வெளியேற முடியாதபடி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சானிபெல் தீவில் ஏறக்குறைய 7,000 பேர் வாழ்கின்றனர், பாலம் சேதமடைவதற்கு முன்பு எத்தனை பேர் வெளியேற முடிந்தது என்பது தொடர்பில் முறையானத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால், புயலுக்கு முன்னர் சானிபெல் மேயர் தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சூறாவளியில் இருந்து பாலம் தப்பும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
#Ian is expected to be a major hurricane in the eastern Gulf of
Mexico during the middle of this week. Regardless of Ian’s exact track, there is a risk of a life-threatening storm surge, hurricane-force winds, & heavy rainfall along the west coast/Panhandle of Florida by mid-week pic.twitter.com/koVmW9yrtJ— National Weather Service (@NWS) September 26, 2022
இதனிடையே, இயன் சூறாவளியால் பைன் தீவு பாலமும் சேதமடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் இரண்டு பாலங்களும் சீரமைக்கும் வரையில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்றே கூறப்படுக்கிறது.
Kidhours – Ian Cyclone Affect
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.