Humanity in Tamil சிறுவர் கட்டுரை
மனிதம் என்பது மனிதநேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். மனிதநேயம் என்பது புனிதம் நிறைந்த செயல். புண்ணியம் தேடி புனிதம் அடைய நினைப்பவர்கள், மண்ணில் மனிதனை நாடி கருணை உள்ளத்துடன் நடந்து கொண்டாலே போதும் புண்ணியம் கோடி கிடைக்கும்.
அன்பு என்பது இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் அன்னியோன்யம், ஆறுதல், நேர்மறை உணர்வு, இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, என்றும் அன்புடன் நடந்து கொள்ளும் முறை. இவற்றுக்கு மனிதம் என்றும், மனிதநேயம் என்றும் போற்றப்படுகிறது.
மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை நற்குணங்களில் முதன்மையானது மனிதநேயமாகும். சகா மனிதனிடம் மட்டுமல்லாது நம்மோடு வாழும் மற்ற உயிரினங்கள்,தாவரங்கள் ,பூச்சிகள் மற்றும் இயற்கை என அனைத்தின் மீதும் பரிவோடு வாழ்வதே ஒரு மனிதனின் குறைந்த பட்ச தகுதியாகும்.
மனித சரித்திரத்தில் எத்தனையோ போர்கள்,சகிக்க முடியாத வரலாற்று உண்மைகளையும் கடந்து நாம் பார்க்கும்போதும் எரிமலை மீது விழும் சிரு பனித்துளியாய் மனித நேயம் இருந்துகொண்டே இருக்கிறது.மனிதநேயத்தை வரலாற்று சுவடுகளில் பறைசாற்றிய எத்தனையோ தலைவர்களை பற்றியும் தனிமனிதர்களையும் நாம் அறிவோம். அத்தகைய மாமனிதர்களை பற்றி நாம் நினைவு கொள்ளும்போது கடல் கடந்து ,தேசாதி தேசம் கடந்து அவர்கள் கொண்ட மனிதநேய கருத்துகள் நம்மை வந்தடைகின்றன.
வரலாற்றில் அன்னை தெரசா,மகாத்மா காந்தி,நெல்சன் மண்டேலாபோன்ற பலர் மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கு தங்கள் செயல்கள் எடுத்துரைத்துள்ளனர் .உலக வரலாற்றில் அன்னை தெரசா ஆற்றிய மனித நேய செயல்பாடுகள் அணைத்து மக்களையும் உன்னத வழிக்கு திருப்புகிறது.தன்னுடைய முழு வாழ்க்கையையும் எளியோர்க்கு அர்ப்பணித்த மாபெரும் தியாக திருமகளாக தெரசாவை இந்த உலகம் பார்க்கிறது.
ரவீந்திரநாத் தாகூர் தனது மனித நேய கருத்துக்களை கீதாஞ்சலி படைப்பில் அதிகம் பகிர்ந்துள்ளார் அதுவே அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்தது,அவரது கோட்பாட்டின்படி இறைவனை வேண்டுவதை எளியோர்க்கு பணிவிடை அல்லது அவர்களை மதித்தல் மூலமாக செய்தலே போதுமானது என்ற கருத்து இன்றளவும் பேசப்படுகிறது.
kidhours – Humanity in Tamil , Humanity in Tamil article
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.