- Advertisement -
ஆராய்ச்சியாளர் குழு ஒன்று முதன் முறையாக செயற்கை தோலில் கைப்பேசிகளுக்குரிய கவர்களை வடிவமைத்துள்ளது.
இக் கவரின் உதவியுடன் தூசிகளை துடைக்கக்கூடியதாக இருப்பதுடன், நெகிழ்தன்மை கொண்டிருப்பதனால் கிள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதில் அழுத்தும்போது சிரிக்கும் வடிவிலான ஈமோஜியினை குறுஞ்செய்தியாக அனுப்பக்கூடியதாகவும், கிள்ளும்போது கோபத்துடன்கூடிய ஈமோஜியை அனுப்பக்கூடியதாகவும் வடிமைக்கப்பட்டுள்ளது.
சிலிக்கோன் படை மற்றும் எலக்ட்ரோட் படை எனும் இரு படைகளைக் கொண்டிருப்பதனாலேயே இது சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Marc Teyssier என்பவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழுவே இதனை வடிவமைத்துள்ளது.
மேலும் இக் கவரின் செயற்பாட்டினை தெளிவாக விளக்கக்கூடிய வீடியோ ஒன்றினையும் குறித்த ஆராய்ச்சியாளர் குழு வெளியிட்டுள்ளது.
- Advertisement -