ஒவ்வொரு நாளும் புத்தகம் படிக்கும் போதும் வாசித்த பக்கத்தை தேடுவது கஷ்டமாக உள்ளதா. அப்போ இந்த DIY புக்மார்க்கை பயன்படுத்தி பாருங்கள். இந்த DIY புக்மார்க்குகளை வீட்டிலேயே வெறும் தேவையில்லாத அட்டையை கொண்டு கூட செய்ய முடியும். இந்த லாக்டவுன் காலத்தில் உங்க குழந்தையின் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க அவர்களையே இந்த புக்மார்க்குகளை செய்ய தயார்படுத்தலாம். அவர்களுக்கு நேரமும் செலவான மாதிரி இருக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு தேவையான புக் மார்க்குகளை அவர்களே செய்ததாக இருக்கும்.
புத்தகம் ஒரு சிறந்த நண்பன் என்று கூறுவார்கள். அதிலும் இந்த லாக்டவுன் காலத்தில் உங்க நேரத்தை செலவழிக்க புத்தகம் ஒரு சரியான துணை என்றே கூறலாம். ஏனெனில் புத்தகம் படிக்கும் போது நேரம் செலவாகுவதே தெரியாது. ஒரு புத்தகம் மற்றும் சூடான ஒரு காபி போதும் உங்க மாலை நேரத்தை மிக அழகாக மாற்றி விடலாம். ஆனால் மிகப்பெரிய புத்தகம் ஒன்றை படிக்கும் போது நமக்கு இருக்கும் ஒரு கஷ்டம் படித்து முடித்த பக்கத்தை கண்டுபிடிப்பது தான். படித்து முடித்த பக்கத்தை புரட்டுவதற்குள் அடுத்த வேலையே வந்து விடுவது உண்டு அல்லது புத்தகம் படிக்கும் போது இடையில் எதாவது வேலை வந்தால் என்ன பக்கம் படித்தோம் என்பதை மறந்து விடுவதுண்டு.
இந்த பிரச்சினையை சமாளிக்கத்தான் இருக்கவே இருக்கு புத்தக மார்க்குகள். புத்தக மார்க்குகள் நீங்கள் கடைசியாக படித்த பக்கத்தை கண்டறிய உதவுவதோடு உங்க புத்தக வாசிப்பு பழக்கத்தையும் தூண்ட உதவி செய்யும். இந்த புத்தக மார்க்குகளை நீங்கள் எளிதாக வீட்டிலேயே செய்து பயன்படுத்த முடியும். இதற்காக காசு கொடுத்து கடைகளில் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில எளிய பொருட்களை வைத்தே அழ அழகாக புத்தக மார்க்குகளை செய்ய முடியும்.
மேலும் உங்களுக்கு பிடித்த வாசகங்களை , மேற்கோள்களை , உத்வேக வாசகங்களைக் கூட இந்த புத்தக மார்க்கில் நீங்கள் ரெடி பண்ணிக் கொள்ளலாம். மேலும் உங்க குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை தூண்டும் விதத்தில் கார்டூன் கேரக்டர்கள், பட்டாம்பூச்சி புக் மார்க்குகள், கலர்புல் பூக்கள் புக்மார்க்குகள் எனக் கூட நீங்கள் தயாரித்து பயன்படுத்தலாம்.
யாருக்காவது நீங்கள் புத்தகங்களை பரிசளிக்க நினைத்தால் கூட இந்த அழகான புக்மார்க்குகளுடன் பரிசுகளை வழங்கலாம்.
சரி வாங்க இந்த DIY புக்மார்க்குகளை எப்படி வீட்டிலேயே தயாரிக்கலாம் இதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை என அறிந்து கொள்வோம்.
அழகான DIY புக்மார்க் (Book Mark) செய்வது எப்படி..?
பேப்பர் அட்டை – 1(தேவையில்லாத அட்டை)
அளவுகோல்
பேப்பர் பஞ்சிங் மெஷின் (துளை போட)
கலர் பெயிண்ட்
பெயிண்டிங் பிரஷ்
அழகுபடுத்த கண்ணாடி ஸ்டோன்ஸ்
தடிமனான நூல் (கட்டுவதற்கு)
சிறுவர் செய்திகள் பிளாஸ்டிக் பாட்டிலைக் கட்டிக்கொண்டு நீந்தி அகதியாகத் தஞ்சமடைந்த சிறுவன்
செய்யும் முறை
வீட்டில் தேவையில்லாத ஒரு அட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை செவ்வக வடிவில் அளவுகோல் கொண்டு அளந்து வெட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு பேப்பர் பஞ்சிங் மெஷின் கொண்டு அதன் ஒரு மேல் பக்கத்தில் துளையிட்டு கொள்ளுங்கள். பிறகு மற்றொரு குறுகிய பக்கத்தை கத்தரிக்கோல் கொண்டு ஆர்க் வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்களுக்கு பிடித்த கலர் பெயிண்ட்டை எடுத்து பிரஷ்யைக் கொண்டு அட்டை முழுவதும் கலர் பண்ணுங்கள்.
இப்பொழுது கண்ணாடி ஸ்டோன்ஸை எடுத்து கலர் பண்ண அட்டையை உங்களுக்கு பிடித்த டிஷைனில் அழகுபடுத்துங்கள். தேவை என்றால் நிறைய கலர்களைக் கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பூக்கள் மாதிரி வரைந்து கூட அழகுபடுத்திக் கொள்ளலாம்.
அந்த அட்டையின் ஓரங்களில் கோல்டன் கலரைக் கொண்டு வரையிட்டு கொள்ளுங்கள். இது உங்க புக் மார்க்குக்கு ஒரு ரிச் லுக்கை கொடுக்கும். பிறகு அழகான தடினமான நூலை எடுத்து துளையிட்ட பக்கத்தில் கட்டிக் கொள்ளுங்கள். நூல் கொஞ்சம் நீளமாக புத்தகத்தின் வெளியே தெரியும் படி இருக்க வேண்டும்.
வாசிப்பை அழகாய் அனுபவியுங்கள்
இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் வாசித்த பக்கம் மறக்காமல் இருக்க இந்த அழகான DIY புக் மார்க்கை பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி நல்ல புத்தகங்கள் நமக்கு நண்பனாக இருக்கிறதோ அதே மாதிரி இந்த அழகான புக்மார்க்குகள் புத்தகத்திற்கு ஒரு சிறந்த நண்பனாக வழிகாட்டுகிறது. என்னங்க இப்பொழுதே இதை நீங்களும் செய்து பயன் பெறலாமே. புத்தகம் படிக்கும் போது எந்த பக்கம் படிச்சோம்னு ஞாபகம் இல்லையா… அப்போலாம் இந்த DIY புக்மார்க்கை பயன்படுத்துங்க.