இயற்கை வைத்தியத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது இயற்கை தேன்.இவற்றை சித்த வைத்தியர்கள் சித்த வைத்தியத்தின் மருந்துகளை, தேனில் கலந்து மருந்தாக கொடுப்பது சித்த மருத்துவத்தின் பாரம்பரியமாகும்.
மொந்தன் தேன், மலைத்தேன், குறிஞ்சி தேன், கொசுவந்தேன், திப்பிலித்தேன் என, தேனில் பலவகையான சுவை மற்றும் வேறுபாடுகள் உண்டு. மழை காலம் முடிந்ததும், செடிகளிலும், மரங்களிலும், பூக்கள் அதிகம் பூக்கும். பூக்கள் அதிகமாக பூக்க அதனை தேனீக்கள் வந்து அமர்ந்து, தேனை உறிஞ்சி அல்லது காவி செல்லும். வரட்சியான காலங்களில் தேன் உற்பத்தி குறைவாகவே இருக்கும் அதே வேளை அதிக மழை காலங்களிலும் குறைவகவே காணப்படும்.
1.இரவில் தூக்கம் வரவில்லை என்றால், ஒரு தேக்கரண்டி தேனை, பாலில் கலந்து உண்ணுங்கள் சோர்வு நீங்கி, நல்ல அமைதியான அழ்ந்த நித்திரை வரும்.
2.குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில், இரும்புச்சத்து போதுமான அளவு இருக்க வேண்டுமாயின் சிறிது தேன் கலந்து கொடுக்கலாம்.
3.உணவு உட்கொள்ளும் போது, இரண்டு தே கரண்டி தேனை சாப்பிட்டு வந்தால், நாளடைவில் ஒற்றைத் தலைவலி நிரந்தரமாக நின்று விடும்.
4.சிறுவர்கள் தூங்க செல்வற்க்கு முன், ஒவ்வொரு நாளும் ஒரு தே கரண்டி தேனை அருந்த கொடுத்து வந்தால், படுக்கையில் சிறுநீர் போகும் பழக்கம் நின்று விடும்.
5.சிறிது நேரம் தேனை வாயில் வைத்திருந்து உமிழ்ந்து பின் கொப்பளித்தால், வாய்ப்புண், வரட்சி ,வெடிப்பு மற்றும் எரிச்சல் போன்ற நேய்களை தவிர்த்து கொள்ளலாம்.
6.நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண்டிப்பக மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தேனை அருந்தவோ அல்லது வேறு தேவைக்கோ பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.