Saturday, January 18, 2025
Homeகல்விஇலங்கை நாணயத்தின் வரலாறு#History of the Sri Lankan Currency

இலங்கை நாணயத்தின் வரலாறு#History of the Sri Lankan Currency

- Advertisement -

இலங்கை நீண்ட வரலாற்றையும் அதேபோன்று நீண்டதும் செல்வம் மிகுந்த பொருளாதார வரலாற்றையும் கொண்டதொரு நாடாகும். அத்தகைய வரலாற்றினைக் கற்பது பொருளியலாளாகளுக்கு மட்டுமன்றி சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நன்மையளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாட்டின் வெவ்வேற காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் அந்நாட்டின் வரலாற்றினைக் கற்கும் பொழுது முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. அளவில் சிறிதாக இருந்தபோதும் அதன் அற்பசொற்ப விடயங்களினூடாக நாணயங்கள் அவை பயன்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார வரலாறு பற்றிய பெறுமதிமிக்க தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கிறன.

- Advertisement -
ilankai naanayaththin varalaru
www.kidhours.com

தொலமியின் உலக வரைபடத்தில் இலங்கை பெரிதாக உள்ளது ஏன்?
கி.பி. 150ஆம் ஆண்டளவில் உரோமில் வசித்த தொலமியினால் வரையப்பட்ட உலக வரைபடமே இங்கு காணப்படுகின்றது. அவர் அதனை மிகவும் சரியான நெடுங்கோடு மற்றும் அகலக்கோடுகளுக்கடையிலான இணைப்புக்களை கொண்டதாக வரைந்துள்ளார். எனினும் மத்தியதரைப் பிரதேசத்தையும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கையும் மிகச் சிறந்த விதத்தில் காட்டியுள்ள தொலமியின் வரைபடத்தில் இலங்கை மிகப் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அது தற்செயலானதொன்றல்ல. அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னர் இருந்தே உலக மக்களிடையே இலங்கை தொடர்பில் காணப்பட்ட வரவேற்பே அதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. நீளத்திலும் அகலத்திலும் சிறியதாக இருந்த போதிலும் முழு உலத்திலும் அதற்கு பெரும் மதிப்பும் வரவேற்பும் காணப்பட்டது.

பண்டைய காலத்தில் எமது நாடு உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாயிருந்தது யாதெனில், இது தூர கிழக்கிலிருந்து மேற்கு வரை வியாபித்திருந்த கடல் பட்டுப்பாதையின் மத்தியில் அமைந்திருந்தமையேயாகும். அதேபோன்று அது தரைவழிப் பட்டுப்பாதைக்குள் பிரவேசிக்கின்ற ஒரு நுழைவாயிலாகவும் காணப்பட்டது. மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருகை தந்த வணிகர்கள் மற்றும் நாடுகளைக் கண்டறியும் பயணிகள் இந்நிலப் பரப்பிலேயே சந்தித்துக்கொண்டனர். இலங்கை அவர்களுக்கான வர்த்தக மத்திய நிலையமொன்றாகக் காணப்பட்டது. இது பற்றிய அநேகமான தகவல்கள் கிரேக்க, உரோம மற்றும் சீன எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த விடயங்கள் இலங்கையின் பொருளாதார வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை நெருக்கமாகப் பரிசோதிக்கும் பொழுது அக்காலகட்டத்தில் இலங்கையில் பொறியியல் கலையும் வேளாண்மையும் மிகவும் அபிவிருத்தியடைந்த மட்டத்தில் காணப்பட்டதென்பது தெளிவாகின்றது. அதுமட்டுமன்றி அதற்கு சமாந்திரமாக இலங்கையில் அபிவிருத்தியடைந்த வியாபார முறையொன்றும் நடைமுறையில் இருந்தது.

- Advertisement -

இம்முயற்சிகள் பற்றிய விபரமான தகவல்களை கல்வெட்டுக்கள், வம்சக்கதைகள், (நீண்டகால ராஜபரம்பரைகள்) பண்டைய கடித ஆவணங்கள் மற்றும் ஏனைய தொல்பொருளியல் சான்றுகளின் ஊடாகப் பெறலாம். இச் சான்றுகளில் நாணயங்கள் மற்றும் கல் வெட்டுக்களுக்கு சிறப்பானதொரு இடம் காணப்படுகின்றது. பண்டையகால இலங்கையின் பொருளாதார வரலாறு பற்றி இனங்காணக்கூடிய உள்நாட்டு மூலாதாரங்களான பெருந்தொகை நாணயங்கள் மற்றும் கல் வெட்டுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றன. உள்நாட்டு மூலாதாரங்களுக்கு மேலதிகமாக சர்வதேச வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் அறிக்கைகளின் மூலமும் பண்டையகால இலங்கையின் கடந்தகால வர்த்தகப் பொறிமுறை பற்றிய விடயங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார வரலாறு பற்றிய காலங்களைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இத்தகவல்கள் அதிகளவு அனுகூலங்களை வழங்குகின்றன. இவற்றின் மூலம் அளப்பரிய உதவி கிடைக்கின்றது.

இலங்கையின் நாணயப் பயன்பாட்டினை பின்வரும் காலப்பகுதிகளாகப் பிரிக்கமுடியும்.

1.அனுராதபுர யுகம்
2.பொலநறுவை தொடக்கம் கோட்டை வரையான யுகம்
3.கண்டி யுகம்
4.காலணித்துவ யுகம்
5.இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரத்திற்குப் பின்னரான காலம்

i அனுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்
1.கஹபான

2.சுவாஸ்திக நாணயக்குத்தி

3.பிடரிமயிர் இல்லாத சிங்க நாணயக் குத்திகள்

4.லக்ஷ்மி பளிங்குக்கல்

5.கஹவானு அல்லது லங்கேஸ்வரர் நாணயக்குத்தி

6.வெளிநாட்டு நாணயக்குத்தி

sri-lanka_old_currency

sri-lanka_old_currency

sri-lanka_old_currency

இலங்கை நாணயத்தின் வரலாறு#History of the Sri Lankan Currency 1

sri-lanka_old_currency

sri-lanka_old_currency

sri-lanka_old_currency

sri-lanka_old_currency

ii உரோம நாணயங்கள்
iii சீன நாணயங்கள்
iv அரேபிய நாணயங்கள்

நாணயங்களிலுள்ள அரசர்கள் பெயர்கள்:

1.இராசரட்டை         – நிசங்கமல்ல
2.இராசராசன்          – கொடகங்கா
3.ராஜேந்திரதேவன் – லீலாவதி
4.விஜயபாகு I          – சகாசமல்லா
5.பராக்கிரமபாகு I   -தர்மஅசோகா

 

reference
இலங்கை மத்திய வங்கி

***************************************

 

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.