Monday, January 20, 2025
Homeகல்விகட்டுரைசித்திரா பௌர்ணமி என்றால் என்ன ?#Hindu fasting # Hindu siththira pournami

சித்திரா பௌர்ணமி என்றால் என்ன ?#Hindu fasting # Hindu siththira pournami

- Advertisement -

Hindu siththira pournami

- Advertisement -

நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பௌர்ணமி.நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் சித்ரா பவுர்ணமி.

மாதங்களில் முதல் மாதமாக வருவது சித்திரை. அதில் சூரியன் வரும்பொழுது ஆண்டு தொடங்குவதாகப் பஞ்சாங்கம் அறிவிக்கின்றது. அந்தச் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகின்றார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார். நவக்கிரகங்களில் ராஜ கிரகங்களான சூரியனும், சந்திரனும் பலம் பெறும் நாள் தான் ‘சித்ரா பவுர்ணமி’ விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
. இந்த விழாவைக் கொண்டாடுவதன் மூலம் வாழ்வில் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெற வழிபிறக்கின்றது.

- Advertisement -

பொதுவாக மனிதனின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது தெய்வ வழிபாடுகளும், விரதங்களும் தான். அந்த விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப்பலனை வழங்கும் என்பதை நாம் அனுபவத்தின் வாயிலாகத்தான் உணரமுடியும்.
இது போன்ற சந்திர பலம் பெற்ற நாட்களில் கடல் தண்ணீர் மேல்நோக்கிப் பொங்கி எழும். கடல் அலை சீறிப்பாயும், அலைபாயும் அந்த நாளில் நாம் விரதமிருந்தால் அலைபாயும் மனதில் அமைதி கிடைக்கும். அப்படிப் பட்ட நாட்களில் ஓர் அற்புதமான நாள் தான் சித்ரா பவுர்ணமி ஆகும்.

- Advertisement -

சந்திரனை ஸ்ரீநிவாசன் தனது பாதங்களின் அடியிலும், சிவபெருமான் பிறை நிலவாகத் தன் தலையிலும் கொண்டுள்ளார். அம்பாளோ பக்தனுக்கு இறங்கித் தனது காதுத்தோட்டை எறிந்து வானில் சந்திரனை உருவாக்கியவள். சந்திர சகோதரி எனப் போற்றப்படுபவள் மகாலஷ்மி. பெண் ஜாதகத்தில் சந்திரன் சிறப்பிடம் பெற்றால் அவள் மிக அழகாக இருப்பாள் என்று அப்பெண்ணைப் பார்க்காமலேயே சொல்லிவிடலாம் என்பது நம்பிக்கை.

இப்படி பல பெருமைகளைக் கொண்ட சந்திரன் ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களிலும் முழு நிலவாய்த் தோன்றும் நாள் பெளர்ணமி. சித்திரை மாதத்தில் தோன்றும் சந்திரன் அறுபத்துநான்கு கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி, ஆண்டின் அரிதான பெளர்ணமியாகக் கொள்ளப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சித்திரா பௌர்ணமி
எம தர்மராஜனின் தம்பியாக சித்ரகுப்தன் இருந்து, மனிதர்கள் செய்யும் நல்ல, கெட்ட செயல் களை பதிவு செய்து வைத்திருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதர்களின் பாவ, புண்ணி யக் கணக்குகளை அவர்களின் காலம் முடிந்த பிறகு கடவுளுக்கு தெரிவித்து, அவரவருக்கு தக்க பலன்களை அளிக்க கூடியவர் சித்ரகுப்தன் என்று புராணங்கள் சொல்கின்றன.

இந்த நாளில் சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டியும், விஷேச பூஜைகளுடன் சிவபெருமானை வழிபடும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி சிறப்பு பெறுகிறது.நாம் செய்த பாவ புண்ணியங்களைப் பதிந்து வைக்கும் சித்ரகுப்தனை வழிபட்டு, கொண்டாடும் விழாவாகவும் இந்தப் பவுர்ணமி அமைகின்றது. நாம் மலையளவு செய்த பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாக மாற்றவும் செய்யும்படி கும்பிட வேண்டும்.

அப்பொழுதுதான் நம்முடைய பாவத்தின் அளவு குறைந்து புண்ணியக் கணக்கின் அளவு கூடும்.சித்ரகுப்தனுக்கு இல்லத்திலேயே நினைத்து விரதமிருந்து சித்ரகுப்தனை வழிபாடு செய்யலாம். அவ்வாறு வழிபடுவதால் ஆயுள் விருத்தியும், ஆதாயமும் கிடைக்கும். செல்வ விருத்தி உருவாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இந்த சித்ராபவுர்ணமி அன்று பொங்கல் வைத்து மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

அன்றைய தினம் பூஜை அறையில் மூலமுதற்கடவுளான விநாயகப் பெருமானை மையத்தில் வைத்து, அருகில் ஒரு வெண்கலச் சட்டியில் மண்ணுடன் தண்ணீர் கலந்து வைத்து அதன் மேல் ஒரு செம்பு வைத்து, அந்தச் செம்பில் முக்கால் அளவிற்கு மேல் தண்ணீர் நிரப்பி வைத்து, மாவிலை, தேங்காய் வைத்து, அதைக் கரகமாக நினைத்து வழிபட வேண்டும். அதன் அருகில் குத்துவிளக்கு ஏற்றிக் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்கும் பொழுது சங்கு ஊத வேண்டும். நவதானியம் பரப்பி வைத்து, வெள்ளியில் ஏடும், எழுத்தாணியும் வைத்து ‘சித்ரகுப்தன் படியளப்பு’ என்று எழுதி வைப்பர்.

 

kidhours – Hindu siththira pournami

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.