Wednesday, January 22, 2025
Homeசுகாதாரம்அருகம்புல்லின் பயன்கள் Herbal Plants In Tamil # Tamil Healthy Tips # World...

அருகம்புல்லின் பயன்கள் Herbal Plants In Tamil # Tamil Healthy Tips # World Best Herbal Plants

- Advertisement -

சிறுவர் சுகாதாரம் Herbal Plants In Tamil

- Advertisement -

அருகம் புல்லில் உள்ள வேர், இலைகள் உட்பட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அளிக்க வல்லது.

அருகம்புல்லைச் சித்தர்கள் ஆரோக்கிய புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர். அருகம்புல் எல்லாவிதமான மண்ணிலும் வளரக்கூடியது.

- Advertisement -

இது எவ்வளவு காலம் மழை இல்லை என்றாலும் காய்ந்து காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிதளவு மழைபெய்தாலும் உடனே செழித்து வளரக்கூடிய தாவரம் ஆகும்.

- Advertisement -

அறுகம்புல் முழுவதும் மருத்துவ பயன் கொண்டதாகும். நோய்கள் பலவற்றை அழிக்கும் குணம் கொண்டதால் சித்த ஆயர்வேத யுனானி மருத்துவத்தில் முதலிடம் பிடிக்கின்றது.

1. அருகம்புல் முழுவதும் குளிர்ச்சித் தன்மையும் இனிப்புச் சுவையும் கொண்டது. இது உடல் வெப்பத்தை தணிக்கும் தன்மை கொண்டது.

2. சிறுகுடல் பெருங்குடல் புண்களை ஆற்றக் கூடியது.

3. அரிப்பு, சொறி, சிரங்கு, படர்தாமரை, வியர்க்குறு போன்றவற்றைக் குணப்படுத்தும். அருகம்புலைச் சிறு துண்டுகளாக வெட்டி பச்சையாக அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து பூச வேண்டும்.

4. அக்கி கொப்பளங்கள், சொரியாஸிஸ் போன்றவற்றை குணப்படுத்தும்.

Herbal Plants In Tamil
Herbal Plants In Tamil

5. கண் பார்வை தெளிவுபெறும். கண் நோயை போக்கவும், கண் பார்வையை கூர்மையாக்கும் உதவுகின்றது.

6. அருகம்புல் ஒரு சித்த நஞ்சு நீக்கியாகும். நாம் உண்ணும் உணவு அருந்தும் நீர் சுவாசிக்கும் காற்று என அனைத்தும் இக்காலத்தில் நச்சுத்தன்மை நிறைந்ததாக உள்ளன. அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் அருந்துபவர்களுக்கு உடலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களையும் வியர்வை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும்.

7. உடலில் இன்சுலின் குறைபாட்டால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளையே உண்ண வேண்டும். தினந்தோறும் அருகம்புல்லை குடித்து வந்தால் உடலுக்கு நன்மை கிடைக்கும்.

8. தோஷங்கள் நீங்கவும், பூஜைகளிலும், சுபகாரியங்களிலும் அருகம்புல்லினைப் பயன்படுத்துவர்.

9. நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாற்றைத் தினமும் உணவின் பின் எடுத்து வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

10. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்தும். அருகம்புல்லை தயிர்விட்டு குடித்து வந்தால் நன்கு பயன் கிடைக்கும்.

11. உடல் எடையைக் குறைக்கும். உடல் இளைக்க தினமும் அறுகம்புல் சாறு குடித்து வரலாம். காலை மற்றும் மாலை இரண்டு வேளைகள் குடித்து வர வேண்டும்.

12. உடல் அழகாகவும், மிருதுவாகவும் இருக்க உதவுகின்றது. அருகம்புல் சாற்றையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவில் எடுத்து அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும் பின் கடலை மாவால் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

13. உடலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கும். தளிர் அருகம்புல்லை நன்கு கழுவி மைய்யாக அரைத்து பசும் பாலுடன் சேர்த்து சுண்டக் காய்ச்சி நாள்தோறும் இரவில் தூங்கச் செல்லும் முன் சாப்பிட்டு வரவேண்டும்.

14. திடீரென ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு அருகம்புல் சிறந்த மருந்தாகும். அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சை இலையையும், அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்து கட்டினால் இரத்தப்போக்கு நின்றுவிடும்.

 

kidhours – Herbal Plants In Tamil, Herbal Plants In Tamil notes , Herbal Plants In Tamil for Kids

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.