கேரளாவில் கொரோனாவுக்கு 4 மாத குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452 ஆக அதிகரித்துள்ளது.
723 பேர் பலியாகியுள்ள நிலையில் நேற்று 4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17ம் திகதி கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது பெண் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
அங்கு குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது, இதனையடுத்து குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இந்நிலையில் இறுதிச்சடங்கிற்காக அக்குழந்தையை தூக்கிச்செல்லும் புகைப்படம் வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

