Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்புதிய ஹண்டா வைரஸ் என்றால் என்ன? எதிலிருந்து பரவுகிறது?#hanta#handavirus

புதிய ஹண்டா வைரஸ் என்றால் என்ன? எதிலிருந்து பரவுகிறது?#hanta#handavirus

- Advertisement -

சீனாவில் வுஹான் மாகாணத்தில் முதல் தொற்று ஏற்பட்டு நாடுகளை மூடவைக்கும் அளவுக்கு சென்றுவிட்ட இந்த கொரோனா வைரஸ், வரலாறு காணாத அளவுக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தில் ’ஹண்டா’ என்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்திருக்கிறார்.மூன்று நாட்களுக்கு முன்பாக சீனாவின் ஷாங்ஷி பிராந்தியத்தில் , சக தொழிலாளர்கள் 32 பேருடன் பேருந்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த நபர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று நோய் இருப்பது தெரியவந்தது. அவருடன் பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டத்தில், அவர்கள் யாருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

hanta-virus

கொரோனா வைரஸுக்கு பெரிய விலைகொடுத்து, கொத்துக் கொத்தாக மக்களைப் பறிகொடுத்த சீனாவில் மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது, மொத்த உலகத்தையும் அசைத்துப் பார்க்கும் விஷயமாக மாறியுள்ளது.அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி, (Centre for Disease control and Prevention) இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுகிறது. ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியின் எச்சில் அல்லது கழிவுகளைத் தொடும் ஒரு நபர், கைகளைக் கழுவாமல், நேரடியாக தனது முகத்தைத் தொட்டால் அவருக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது மிகவும் அரிதாக விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்குக் காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி,வாந்தி ஆகியவை ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனைகள் ஏற்படும். தற்போது வரை தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே மற்றொருவருக்கு வைரஸ் பரவாது. ஒருவரின் சுவாச மண்டலம் மூலமாக ஹண்டா வைரஸ் பரவாது. ஆனால் ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதரின் கழிவுகள் அல்லது ரத்தம் மூலமாக இது மற்றொருவருக்கு பரவும்’ என விளக்கமளித்துள்ளார் குளோபல் டைம்ஸ் இணையதளத்திடம் பேசிய வுஹான் பல்கலைக்கழக பேராசிரியர் யாங் ஷங்யூ.

- Advertisement -

 

kidhours-news
coronavirus-tamil-news#corona,tamil-news-corona#corana#kidnews#tamil-news#corana-prevention#corona-virus-in-tamil#corona-mask-in-tamil#corona-mask#corana-treatment#corona-in-china#corona-in-italy#corona-in-usa#corona-in-india#korana#korona-in-uk#corona-in-canada#corona-in-sri  lanaka#corona-spread#COVID-19#corona-pathippukkal#corona-updated#corona-daytoday-update
- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.