Growing Tree in Human Body சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்டவரின் வயிற்றில் இருந்து இந்த மரம் (அத்தி மரம்) முளைத்திருக்கிறது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போது பல மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளன. சிறு வயதில் ஏதேனும் பழங்களை சாப்பிடும் போது கொட்டைகளை தெரியாமல் விழுங்கிவிட்டால்,
“அவ்வளவுதான்.. உன் வயிற்றில் மரம் முளைக்கப் போகிறது” என பெரியவர்கள் விளையாட்டாக பயமுறுத்துவதை கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் உண்மையிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் கிரேக்க எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் சில ஆண்டுகளாக அகழ்வாய்வு நடைபெற்று வந்தது.
அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு செய்துள்ளனர்.
அந்த சமயத்தில், துருக்கியில் இல்லாத மரமான அத்தி மரம், ஒன்றே ஒன்று அங்கு வளர்ந்திருந்தது.இதனால் ஆச்சரியமடைந்த ஆராய்ச்சியாளர்கள், அந்த மரத்தின் அடிப்பகுதியை தோண்டி பார்த்தனர்.
அப்போது அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஏனெனில், ஒரு மனிதனின் சடலத்தின் வயிற்றில் இருந்து அந்த அத்தி மரம் முளைத்திருந்து.
இதையடுத்து ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார், அழுகி உருக்குலைந்த நிலையில் இருந்த அந்த சடலத்தை எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த நபர், துருக்கி பழங்குடியினத்தை சேர்ந்த அகமது அர்க்யூன் என்பது தெரியவந்தது.
துருக்கியில் இயங்கிய பழங்குடியின அமைப்பில் இணைந்து செயல்பட்ட அகமது அர்க்யூன், கிரேக்க பழங்குடியினத்தவருக்கு எதிராக சண்டையிட்டு வந்துள்ளார்.
அந்த சமயத்தில், 1974-ம் ஆண்டு எதிரிகள் அவரை பிடித்து இங்குள்ள குகை ஒன்றுக்கு கொண்டு சென்று வெடிகுண்டுகளை வீசி கொலை செய்துள்ளனர்.
அவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸாரும் அவரை தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் எதிரிகளுக்கு பயந்து தலைமறைவாகி இருக்கலாம் என கருதப்பட்டு வந்தது.
Kidhours – Growing Tree in Human Body , Growing Tree in Human Body
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.