Wednesday, January 22, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஅரசு மற்றும் அரசாங்கம் என்றால் என்ன ? Government and Governance in Tamil #...

அரசு மற்றும் அரசாங்கம் என்றால் என்ன ? Government and Governance in Tamil # World Tamil Best Essay

- Advertisement -

அரசு மற்றும் அரசாங்கம் Government and Governance in Tamil பொது அறிவு – உளச்சார்பு

- Advertisement -

அரசு மற்றும் அரசாங்கம் பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைப்படுகின்றன இருப்பினும் பொதுவான அரசு மற்றும் அரசாங்கம் பற்றி உற்று நோக்குவோம்

அரசு ( Government ) என்பது நமது மூளைக்குச் சமமானது என்றால் அரசாங்கம் ( அரசு + அங்கம் , அரசின் அங்கம் ) என்பது நமது கை , கால் போன்ற மற்ற உறுப்புகளுக்கு நிகராகக் கருதப்படத் தக்கவையாகும் ( Government Departments ). அரசாங்கம் என்பது அரசுக்குக் கட்டுப்பட்டு அரசின் ஆணைகளை நிறைவேற்றுகின்ற அமைப்புக்கள் ஆகும்.

- Advertisement -

இந்த அமைப்புகள் செயல்படுவதற்காக அரசால் இவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவிர வேறுஅதிகாரம் எதுவும் இந்த அமைப்புகளுக்கு க் கிடையாது.சட்டத்தை இயற்றுவது அரசு தான், அரசாங்கம் அல்ல.
பேச்சுவழக்கில் அரசு என்பதும், அரசாங்கம் என்பதும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உண்மையில் அரசு என்பதும், அரசாங்கம் என்பதும் வெவ்வேறானவை. பின்வரும் அட்டவணையிலிருந்து அரசுக்கும், அரசாங்கத்துக்கும் உள்ள வேறுபாடுகளை அறியலாம்.

- Advertisement -
அரசு அரசாங்கம்
அரசு என்பது, மக்கள் கூட்டம், நிலப் பரப்பு, அரசாங்கம் மற்றும் இறைமை ஆகிய நான்கு கூறுகளை கொண்டதாகும். அரசாங்கம் என்பது அரசின் நான்கு கூறுகளில் ஒன்றாகும்.
அரசு மூல அதிகாரங்களை பெற்றதாகும். அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவை ஆகும்.
அரசு என்பது நிரந்தரமான என்றும் தொடரும் ஒரு அமைப்பாகும். அரசாங்கமானது தற்காலிக தன்மை உடையதாகும்.
அரசு என்பது கருத்தை ஒட்டியதாகும். காண முடியாததும் ஆகும் அரசாங்கம் என்பது காணக்கூடிய ஒரு திட அமைப்பாகும்

 

  1. நிர்வாகம்

2. இராணுவம் , போலீஸ் , சிறைச்சாலை ,

3 நீதிமன்றம்

4. பாராளுமன்றம், சட்டமன்றம்

இப்படி இந்த நான்கும் சேர்ந்தது தான் ”அரசு”இந்த அரசைப் பற்றி பேசுவது தான் அரசியல் முதல் மூன்று பிரிவும் ( நிர்வாகம் /இராணுவம் , போலீஸ் , சிறைச்சாலை / நீதி ) நிரந்தரமாக இருக்கும்.

Government and Governance in Tamil
Government and Governance in Tamil

4 வது பிரிவான பாராளுமன்றம் & சட்டமன்றம் அதில் 5 ஆண்டுக்கு ஒரு முறை யார் அமர்வார் என்பது தான் அரசியல் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். சட்டமன்றம் , பாராளுமன்றம் இல்லாமலே கூட பல நாடுகளில் அரசு என்பது இருக்கிறது.

ஏன் …? உதாரணத்திற்கு பாகிஸ்தானைப் பாருங்கள்

கொஞ்ச நாள் சட்டமன்றம், தேர்தல் எல்லாம் இருக்கும்.பிறகு கொஞ்ச நாள் அதெல்லாம் இல்லாத நிலை இருக்கும் ஆனால் அரசு என்பது எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும் .

இந்த அரசை நாம் தேர்ந்தெடுப்பதில்லை , ஆனால் அது இருந்து கொண்டேதான் இருக்கும்.நீதி, நிர்வாகம் ,ராணுவம் , போலீஸ் இனதயெல்லாம் நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பதில்லை.

ஆகவே அரசு என்பது நமது விருப்பம் , தேர்வுகளுக்கு அப்பால் நின்று நம் மீது இடையறாது ஆட்சி செலுத்திக் கொண்டே இருக்கிறது, என்பது தெளிவாகிறதா …?ஆட்சி முறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும்

அவைகள்

1 ராணுவ ஆட்சி

2 முடியாட்சி

3 சர்வாதிகார ஆட்சி

4. பாசிஸ்ட் ஆட்சி

5 காலனி ஆட்சி

6. ஜனநாயக ஆட்சி

1 ராணுவ ஆட்சி

ஒரு ராணுவ அதிகாரியே அதிபராக இருப்பார் .

அமைச்சரவை இருக்கலாம் , இல்லாமலும் போகலாம். அதை அதிபரே நியமிப்பார். அல்லது அதற்கு மட்டும் தேர்தல் நடக்கலாம் .( Ex : பாகிஸ்தான் , மியான்மர் , தென் அமெரிக்க நாடுகளில் சில )

2. முடியாட்சி

மன்னராட்சி முறை – ஜோர்டானிலும் பல அரபு நாடுகளிலும் இருப்பது . அரபு மன்னர்கள் எமிர் என அழைக்கப்படுவர் _ அந்நாடு எமிரேட் என அழைக்கப்படும்.

3. சர்வாதிகார ஆட்சி

ஒரு தனி நபர் சர்வ அதிகாரமும் படைத்தவராக இருப்பார் .அவர் இட்டது தான் சட்டம். சென்ற நூற்றாண்டில் பல தென் அமெரிக்க நாடுகளில் இந்த ஆட்சி முறை இருந்தது. .

4. பாசிஸ்ட் ஆட்சி

நாட்டு மக்களை ஒரு போலி தேசிய உணர்வில் அமிழ்த்திவைத்து – பிற தேசிய இனங்களை அழித்தொழிப்பது _ தனிநபரோ ஒரு குழுவோ இப்பணியைத் தலைமை தாங்கும்.

Ex:ஜெர்மனியில் ஹிட்லர் (1933 – 45)

இத்தாலியில் முசோலினி (1922 – 43)

ஸ்பெயினில் பிராங்கோ (1939-75)

இந்தியாவில் RSS – BJP ஆட்சி அப்படியாக உருமாறும் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

5. காலனி ஆட்சி

எங்கோ இருக்கும் ஒரு நாடு வேறு எங்கோ இருக்கும் பிற நாடுகளை அடிமைப்படுத்தி ஆள்வது .இந்தியாவை பிரிட்டன் ஆண்டது போல .பல ஆப்பிரிக்க நாடுகளை ஐரோப்பிய நாடுகள் ஆண்டது போல .

6. ஜனநாயக ஆட்சி

தேர்தல் மூலம் ஓட்டுப் போட்டு ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுப்பது.இந்தியா , பிரிட்டன், அமெரிக்கா , பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில் இருப்பது இந்த ஆட்சி முறைகளைத்தான் ”அரசாங்கம்” என்கின்றோம்.

ஆனால் எல்லா நாடுகளிலும் அரசு என்பது ( நிர்வாகம் /இராணுவம் , போலீஸ் , சிறைச்சாலை / நீதி ) ஒரே வேலையைத் தான் செய்து வந்துள்ளது .ஒரே நாட்டில் மேலே நாம் கண்டவாறு உள்ள ஆட்சி முறை இருந்துள்ளது.

இந்தியாவில்

ராஜாக்கள் ஆண்ட ”முடியாட்சி”

வெள்ளைக்காரன் ஆண்ட ”காலனி” ஆட்சி

1947க்குப் பிறகு ”ஜனநாயக” ஆட்சி

 

kidhours – Government and Governance in Tamil , Government and Governance in Tamil essay , Government and Governance in Tamil political  , Government and Governance in Tamil notes

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.