Sunday, January 19, 2025
Homeசிந்தனைகள்சிறுவர்களுக்கு நற்பண்புகளை கற்று தருவது எப்படி?

சிறுவர்களுக்கு நற்பண்புகளை கற்று தருவது எப்படி?

- Advertisement -
how-to-teach-ood-habits-for-kids-kidhours.jpg
how-to-teach-ood-habits-for-kids-kidhours.jpg

 

- Advertisement -

நற்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.

தாங்கள், தங்களின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க விரும்பும் பண்புகளை, முதலில் பெற்றோர்கள் பயிற்சிசெய்து கொள்ள வேண்டும். ஏனெனில், உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தை பின்பற்ற ஆரம்பிக்கும்.

- Advertisement -

உதாரணமாக, எதையாவது கேட்கும்போது, “ப்ளீஸ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும், எதையாவது பெறும்போது, “தாங்க்யூ” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதையும் உங்கள் குழந்தைக்கு சொல்லித்தர விரும்பினால், அந்தப் பண்புகளை முதலில் நீங்கள் தவறாமல் பின்பற்ற தொடங்க வேண்டும்.

- Advertisement -

நல்ல பண்புக்கூறுகள் என்பது, நடத்தைமுறை, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் ஆகிவற்றோடு தொடர்புடையது. இப்பண்புகளை, மாதிரிகள், வழிகாட்டுதல்கள், உதவுதல் மற்றும் பாராட்டுதல் உள்ளிட்ட பல்வேறான வழிமுறைகளின் மூலமாக உங்களின் குழந்தைக்கு கற்றுத் தரலாம்.

Learning-to-be-responsible-with-money-kidhours
Learning-to-be-responsible-with-money-kidhours

ஒரு குழந்தை தனது நடத்தையில் சற்று வழுக்கினால், அதை நாம் கடுமையாக கையாளக் கூடாது. நம் குழந்தை ஒரு பொது இடத்தில் கோபமாகவோ அல்லது வெறுப்பாகவோ நடந்துகொண்டு, அதன்மூலம் மற்றவர்கள் நம்மை கவனிக்கும் சூழல் ஏற்பட்டால், அந்த நேரத்தில், குழந்தை எதற்காக அவ்வாறு நடந்துகொண்டது என்பதை உணர்ந்து, குழந்தையை ஆறுதல் படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமே தவிர, மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி நினைத்து விடுவார்களே என்று எண்ணி, குழந்தையை தண்டிக்கக்கூடாது. குழந்தை ஒரு சிறப்பான செயலை மேற்கொண்டால், அதை நல்ல முறையில் பாராட்ட வேண்டும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.