Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்அதிர்ச்சி தகவல் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர் Global Tamil kids News

அதிர்ச்சி தகவல் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர் Global Tamil kids News

- Advertisement -

Global Tamil kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மெக்சிகோவில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது.இந்த குழு கடந்த 1980களில் இருந்தே மெக்சிகோவில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டுள்ளது.

- Advertisement -

இவ்வாறான நிலையிலேயே பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் Santiago Meza Lopez என்பவர் சிக்கினார்இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Global Tamil kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Global Tamil kids News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

1996ல் பண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.பெரிய பீப்பாய்க்குள் தண்ணீர் மற்றும் அமிலத்தை கலந்து உடல் பாகங்களை நிரப்பி கரைத்துள்ளனர்.மட்டுமின்றி, சினாலோவா குழுவினரில் சிலருக்கு தாம் பயிற்சியும் அளித்துள்ளதாக antiago Meza Lopez தெரிவித்துள்ளார்.

இவர் கைதான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பொலிஸாரை அணுகி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், பண்ணை ஒன்றில் இருந்து 200 கிலோ அளவுக்கு மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டது.அந்த உடல் பாகங்கள் 650 நபர்களின் மிச்சமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.

antiago Meza Lopez தெரிவிக்கையில்,

300 சடலங்கள் வரையில் தாம் அமிலத்தில் கரைத்திருக்கலாம் என விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பொலிஸார் தெரிவிக்கையில்,

தொடர்புடைய பண்ணையில் சடலங்களை தேடுகையில் தங்களுக்கு மனிதர்களின் பற்கள் மட்டுமே கண்டெடுக்க முடிந்தது எனவும், அவை அமிலத்தில் கரைந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

சினாலோவா குழு நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யும் சடலங்களை பண்ணை ஒன்றில் அனுப்பி வைப்பதாகவும், அங்கே பெரிய பீப்பாய்களில் அமிலத்தை நிரப்பி உடல்களை கரைத்துள்ளதாக கூறுகின்றனர்.இதேவேளை, கைதான antiago Meza Lopez-ன் வீடு மொத்தம் பெரிய பீப்பாய்களை சேகரித்து வைத்திருந்ததும் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Kidhours – Global Tamil kids News

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.