Dinosaur footprint பொது அறிவு செய்திகள்
பிரித்தானியாவில் டைனோசரின் கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள யார்க்ஷைர் மாகாணத்தில் 3 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.
அங்குள்ள கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளர்.
மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Dinosaur footprint
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.