Monday, January 20, 2025
Homeகல்விபுவியியல்புவியியல் தகவல் முறைமை (GIS)என்றால் என்ன?#GIS

புவியியல் தகவல் முறைமை (GIS)என்றால் என்ன?#GIS

- Advertisement -

GIS இன் விரிவாக்கம் Geographic Information System என்பதாகும். அதாவது தமிழில் புவியியல் தகவல் முறைமை என அழைக்கப்படுகின்றது.புவியியல் தகவல் முறைமை தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றபோதிலும், பெரும்பாலும் அவை சுட்டி நிற்கின்ற விடயங்கள் ஒன்றே என்பதனை அவற்றை வாசித்து விளங்கிக்கொள்ளும்போது அறிந்துகொள்ளலாம்.பொதுவாக படம்வரைதல் மற்றும் இடம்சார்ந்த தரவுகளின் பகுப்பாய்வு என்பவற்றை மேற்கொள்வதற்கான கணனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமை புவியியல் தகவல் முறைமை என வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றது.
1.ESRI :- புவிசார்ந்த அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுதல், சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், காட்சிப்படுத்தல் ஆகிய திறன்களைக் கொண்ட ஒரு கணனி மயப்படுத்தப்பட்ட தொகுதி புவியியல் தகவல் முறைமை எனப்படுகின்றது.
2.USGS (U.S.Geological Survey) :புவிசார்ந்த அனைத்துத் தகவல்களையும் பெற்றுக்கொள்ளுதல், சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், காட்சிப் படுத்தல் ஆகிய திறன்களைக் கொண்ட ஒரு கணனி மயப்படுத்தப்பட்ட தொகுதி புவியியல் தகவல் முறைமை ஆகும்.

- Advertisement -

புவியியல் தகவல் முறைமை ஆனது இன்று அனைத்து துறைகளிலும் முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இன்றைய உலகம் இதன் மூலம் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் தரவுகள் சேகரித்தல், முகாமைத்துவம் செய்தல். திட்டமிடல், தீர்மானமெடுத்தல், பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல் போன்ற அனைத்து செயப்பாடுகளிலும் புவியியல் தகவல் முறைமை பயன்படுத்தப்படுகின்றது.உலகளாவிய ரீதியில் இன்று அதிகளவிலான மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் புவியியல் தகவல் முறைமையானது இவை அனைத்தையும் விட வேறுபட்ட அமைப்பிலேயே காணப்படுகின்றது. புவியியல் தகவல் முறைமை ஆனது பாதுகாப்பு துறை, வனப்பாதுகாப்பு, போக்குவரத்து துறை, புவியியற்துறை, சுகாதார துறை, அரசதுறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.

gis_tamil
www.kidhours.com

பாதுகாப்புத்துறை பற்றி அவதானிக்கின்ற போது உலகளாவிய ரீதியில் முதன் முதலில் புவியியல் தகவல் முறைமையானது பாதுகாப்பு துறையிலே பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்த துறையானது இன்றியமையாததாக காணப்படுகின்றது. குறிப்பாக இராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் அதிகளவில் பயன்படுத்தியதுடன் தீவிரவாதம் அதிகளவில் காணப்படும் பிரதேசங்கள் , அச்சுறுத்தலுக்கு உட்படக்கூடிய பிரதேசங்கள், பாதுகாப்பு பலமிக்க பிரதேசங்கள் என வகைப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட்ட முறையில் செயற்படுத்துவதற்கு புவியியல் தகவல் முறைமையானது பெரும் பங்களிப்பினை வழங்குகின்றது.தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாக கூடிய பிரதேசங்கள், தீவிரவாதிகளை கட்டுப்படுத்த எதிர்த்தாக்குதல் நடத்த பொருத்தமான பிரதேசங்கள், குறித்த பிரதேசத்தில் இருக்கும் மக்களின் அளவு, மக்கள் செறிவாக இருக்கும் பிரதேசங்கள் போன்ற அம்சங்களை திட்டமிட்ட முறையில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு GIS பயனுள்ளதாக இருக்கின்றது.

- Advertisement -

வனப்பாதுகாப்பு துறை பற்றி அவதானிக்கும் போது உலகில் காணப்படும் வளங்களை பாதுகாத்து முகாமைத்துவம் செய்வதற்கு புவியியல் தகவல் முறையானது பிரதான பங்கினை வகிக்கின்றது. வனப்பிரதேசமானது சனத்தொகை அதிகரிப்பு, நகராக்கம், உட்கட்டமைப்பு விருத்தி போன்ற செயற்பாடுகளினால் அழிக்கப்படுகின்றது. GIS ஆனது குறிப்பிட்ட பிரச்சனைகள் காணப்படுகின்ற வனப்பிரதேசங்களை அறியவும் அந்த பகுதியில் உள்ள உயிரினங்கள் தொடர்பாக தரவுகளை சேகரித்து அதனை பாதுகாப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவும் , ஆபத்தினை எதிர்கொண்டுள்ள வனப்பிரதேசங்களை இனங்காணவும் உதவுகின்றது. மேலும் வனப்பிரதேசங்களை வகைப்படுத்தவும், வனங்களை வலயங்களாக பிரிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் உதவுகின்றது.

- Advertisement -
gis_tamil
www.kidhours.com

போக்குவரத்து துறை பற்றி அவதானிக்கும் போது நவீன உலகின் அச்சாணியாக போக்குவரத்து காணப்படுகின்றது. அனைத்து தேவைகளையும், சேவைகளையும் நிறைவேற்றுகின்ற ஒரு துறையாக இது காணப்படுகின்றது. பாலங்கள் அமைத்தல், விமான கடல் நிலையங்களினை திட்டமிடல், முகாமை செய்தல் போன்ற செயற்பாடுகளில் GIS முக்கியம் பெறுகின்றது. தனியார் துறை, அரசதுறை போக்குவரத்து இன்று GIS மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து பற்றி அவதானிக்கும் போது , வான் பரப்பிலும், நில பரப்பிலும் வசதிகளை முகாமைத்துவம் செய்தல், பயணத்திட்டம், ஓடுபாதை, வானிலைத்தன்மை, அவசர நிலைமைகள் போன்றவற்றுக்கு GIS பயனுடையதாக காணப்படுகின்றது.

புவியியல் துறை பற்றி அவதானிக்கும்போது நிலத்தின் தேவைக்கும், நிலத்தினை திட்டமிட்ட முறையில் அமைக்கவும் முக்கியம் பெற்றதாக காணப்படுகின்றது. இதற்கு சிறந்த கருவியாக GIS விளங்குகின்றது. நில பிரதேசங்களை வலயங்களாக்குதல், மீள்பயன்பாட்டுக்கு உட்படுத்தல், நிலங்களை பராமரித்தல், நிலக்கீழ் மட்டத்தினை அறிதல் போன்றவற்றுக்கு உதவிகரமாக இருக்கின்றது. எரிமலைகக்குகை, சூறாவளி, சுனாமி , நிலநடுக்கங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கும் GIS துணை புரிகின்றது.சுகாதாரத்துறை பற்றி அவதானிக்கும் போது இந்த துறையில் இடரீதியான வேறுபாட்டினை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் GIS பயனுடைய ஒன்றாக காணப்படுகின்றது. சுகாதார துறையில் காணப்படும் வேறுபாடுகள், வளர்ச்சிப்போக்குகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இது துணை புரிகின்றது. மக்களிடம் இருந்து நோய் பரவும் தன்மை, அதன்பரவல் வேகம், தூரம், சேவைகள் , பகுப்பாய்வுகள் , அளவீடுகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கும் GIS முக்கியமானதாக காணப்படுகின்றது.

gis_tamil
www.kidhours.com

அரசதுறை பற்றி அவதானிக்கும் போது கருத்துக்கணிப்பீடுகள், தேர்தல், அரச நிர்வாகம், வேலைகளினை சுலபமாக மேற்கொள்ளவும், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும், உதவுகின்றது. குடித்தொகை பிரிவு, குடித்தொகை கணிப்பீடு போன்றவற்றுக்கும் ,வரைபடங்களை அமைக்கவும் GIS பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

******************************

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.