அம்மாக்களின் மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பதே குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்ன உணவு கொடுக்கக் கூடாது என்பது தான். அதாவது குழந்தைகளுக்கு சில உணவுகளைக் கொடுக்கக் கூடாது என்ற கட்டுக்கதைகள் பல உள்ளன. ஆனால் அவற்றுள் சில உணவுகள் குழந்தைகளுக்கு உண்மையில் ஆரோக்கியத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத் தான் உள்ளது. குழந்தைகளுக்கு உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுப்பது மிகவும் எளிமையான ஒன்று அல்ல.
குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு ஆரோக்கியமாக இருப்பது அவசியம். அவர்களுக்கு என்ன உணவு தேவை என்பதை அறிந்து கொடுக்க வேண்டியது அம்மாவின் கடமை. மேலும் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் குழந்தைகள் விருப்பம் குழந்தைகள் என்ன சாப்பிட விரும்புவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
குழந்தைகளுக்குச் சுவையை விரும்பும் பண்புகள் உள்ளன. ஆனால் அவற்றை உணவில் காட்டமாட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன உணவு கொடுக்கிறீர்களோ அவற்றைச் சாப்பிடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவைக் கொடுக்கும் பழக்கத்தைத் தொடருங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவைப் பல வகைகள் நிறைந்ததாகக் கொடுங்கள். அதாவது ஊட்டச்சத்து நிறைந்து உள்ளதுள்ளது என்பதால் ஒரே உணவை அடிக்கடி கொடுக்காதீர்கள்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை மாற்றி மாற்றிக் கொடுங்கள். நீங்கள் மளிகை சாமான்களை வாங்கும் போது அதில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். எது சிறந்தது எதற்காக அந்த சத்து நிறைந்த பொருட்களை வாங்குகிறோம் என்று சொல்லிக் கொடுங்கள். அவர்களுக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லையெனில் விட்டுவிடுங்கள். குழந்தைகளுக்கு படிப்படியாக எல்லா சுவைகளையும் சொல்லிக் கொடுங்கள்.
அடிக்கடி சாப்பிடுதல் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை அடிக்கடி கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவும் என்பது தவறான கருத்து. உண்மையில் குழந்தைகளுக்குப் பசி எடுக்கும் போது சாப்பிடுவதும், உணவு உண்ணும் நேரத்திற்குச் சாப்பிடுவதும், மற்றும் சீரான அளவு உணவைச் சாப்பிடுவதும் தான் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வளர்ச்சியைத் தீர்மானிப்பதாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி தேவையற்ற ஸ்னாக்ஸ் கொடுத்தல் மற்றும் அதிகப்படியான உணவைச் சாப்பிடும்படி வலியுறுத்துவது குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பு, நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே, குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை உணவும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுக்கலாம். பழச்சாறுகள் குழந்தைகளின் உணவில் பழச்சாறுகளைச் சேர்க்க வேண்டியது அவசியம். பழச்சாறு உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். ஆனால் ஒரு முழு பழத்தைக் குழந்தைகள் சாப்பிடும் போது கிடைக்கும் சத்து பழச்சாறாக அருந்தும் போது கிடைப்பதில்லை. குழந்தைகளின் உடலுக்கு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவு நார்ச்சத்தும் முக்கியமானது.
குழந்தைகளுக்குப் பழச்சாறாகக் கொடுக்கும்போது, அதன் நார்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும், எனவே, பழத்தை உண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். ஆனால் குழந்தைகள் பழத்தை நேரடியாக உண்ண விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு எடுத்துச் சொல்லி உண்ண வையுங்கள். அவ்வப்போது பழச்சாறுகளைத் தயார் செய்து கொடுங்கள். காய்கறிகள் சில குழந்தைகள் ஆரோக்கியமான உணவை உண்ணத் தயாராக இல்லை.
எனவே பெற்றோர்கள் காய்கறிகளை உணவில் மறைத்து வைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே குழந்தைகளிடம் காய்கறிகளின் நன்மைகளைப் பற்றி சொல்லுங்கள். எந்த காய் சாப்பிட்டால் என்ன நம்மைக் கிடைக்கும், அவற்றின் முக்கியத்துவம், மற்றும் அதனால் ஏற்படும் வளர்ச்சி பற்றி குழந்தைகளுக்குக் கூறுங்கள். மேலும் காய்கறிகளை அவர்களுக்குப் பிடித்த விதத்தில் மற்றும் குழந்தைகளைக் கவருமாறும் செய்து கொடுங்கள்.
சர்க்கரை உள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டால் உயர் ஆற்றல் அளவை அதிகரிக்கும் என்று ஒரு வழக்கு உள்ளது. இது முற்றிலும் தவறான கருத்து. அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக மோசமானது. அதிக அளவில் சர்க்கரைகளைச் சேர்த்துக் கொள்ளுவது குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் சர்க்கரை அளவை கண்டிப்பான முறைகள் கவனிக்க வேண்டும்.