For a Boy Survive His Life சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொடிய புற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஒருவனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பொதுமக்கள் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
மூளைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஹமில்டனைச் சேர்ந்த சிறுவன், தான் வேற்றுரு விலங்குகளை (Monster) பார்க்க வேண்டுமென பெற்றோரிடம் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளான்.
அலாக்ஸான்ட்ரோஸ் அல்லது அலெக்ஸ் என்ற சிறுவன் 10 மாதங்களாக இருந்த போது மிக மோசமான மூளைப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக குறித்த சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
எனினும், அண்மையில் சிறுவனுக்கான சிகிச்சைகள் பலனளிக்கவில்லை எனவும், சில வாரங்கள் மட்டுமே சிறுவன் உயிரோடு இருப்பான் எனவும் மருத்துவர்கள் பெற்றோரிடம் அறிவித்தனர்.
சிறுவன் அலெக்ஸ் தனக்கு கொடூரமான விலங்குகள் அல்லது வேற்றுரு விலங்குகளை பார்க்க ஆசை என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் முகநூலில் மகனின் உடல் நிலை குறித்து விளக்கமளித்து பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
வித்தியாசமான ஆடைகளை அணிந்து சுமார் 350 பேர் வரையில் மகனை சந்திக்க வருவதாக முகநூலில் உறுதியளித்திருந்தனர் என சிறுவனின் தாயான தொசொனாகயிஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார்.
100 முதல் 150 பேர் வரையில் மகனின் ஆசையை நிறைவேற்ற வருவார்கள் என தாம் எதிர்பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், சுமார் ஆயிரம் பேர் வரையில் பல்வேறு வினோதமான ஆடைகளை அணிந்து எலும்புக் கூடுகளாகவும்,
பேய்களாகவும், பிசாசுகளாகவும், பல்வேறு பயங்கர உயிரினங்களாகவும் தோன்றியிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சிறுவனை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஏதோ ஓர் அதிசயம் நடைபெறும் என தாங்கள் பிரார்த்தனை செய்து காத்திருப்பதாக சிறுவன் அலெக்ஸின் பெற்றோர் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
Kidhours – For a Boy Survive His Life
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.