இத்தாலி நாட்டிலுள்ள வெனிஸ் நகரத்தில் தற்போது சுமார் 5 அடி(150செ.மீ) உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த 1872-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் வெனிஸ் நகரம் இத்தகைய துயரத்தை அனுபவித்து வருகிறது. வானிலை இன்னும் மோசமான நிலையை அடைந்து வெள்ளம் 160 செ.மீ ஆக அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் உடன் இணைந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெனிஸ் நகர கடற்பகுதிகளில் பெரும் அலை எழுந்து வருகிறது. இதனால், நகரின் துயர் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.