Flooding Disaster Emergency உலக காலநிலை
அலாஸ்காவில் உள்ள டனானா ஆற்றின் கீழே 10 மைல் தொலைவில் ஏற்பட்ட பனிக்கட்டி உருகி , ஃபேர்பேங்க்ஸுக்கு (Fairbanks) மேற்கே அமைந்துள்ள (Manley Hot Springs) மான்லி ஹாட் ஸ்பிரிங்ஸ் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் பனிக்கட்டிகள் உருவாகியுள்ளதால், தேசிய வானிலை மையம் சனிக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பனிக்கட்டிகள் உருகி பாய்ந்து கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்ததால் தண்ணீர் தொடர்ந்து உயர்ந்தது. வானிலை ஆய்வாளர்களின் கருத்துப்படி , கிராமத்தில் வெள்ள நீர் சுமார் 1 அடி ஆழத்திற்கு உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக மேன்லி ஹாட் ஸ்பிரிங்ஸில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது .
Fairbanks தேசிய வானிலை சேவை கண்காணிப்பு திட்டத்தின் தலைவர் Craig Eckert கூறுகையில், இந்த வெள்ளம் அப்பகுதியில் இதுவரை பதிவான இரண்டாவது மிக மோசமான வெள்ளம்.
உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அவசர மேலாண்மையின் அலாஸ்கா பிரிவின் படி, 50 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெள்ளத்தின் விளைவாக உயரமான நிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
reference – Recentclimate.com, Flooding Disaster Emergency
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.