அதிகமான உலக சாதனைகள் படைத்து வரும் இந்த உலகில் விமானத்தில் பறந்தாலே ஒரு சாதாரண மனிதனுக்கு சாதனையாகும். ஆனால் விண்ணில் பறக்கும் பெருமை எத்தனை பேருக்கு கிடைக்கும்.
மனிதன் தொட்ட உச்சியிலிருந்து கீழே விழுந்தால் என்ன நேரிடும்?? உயிர் மிஞ்சுமா?? இந்த கேள்விகளை சுக்குநூறாக உடைத்தெறிந்து உயிரை துச்சமாக எண்ணி விண்ணிலிருந்து பூமிக்கு குதித்து கின்னஸ் சாதனை படைத்தவரே பெலிக்ஸ் பாம்கார்ட்னர்.
ரெட்பூல் நிறுவனத்தின் ஸ்கை டைவர் என அழைக்கப்படும் இவர் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூனில் விண்ணிற்கு சென்று 75000 அடி உயரத்திலிருந்து பூமிக்கு குதித்து கிண்ணஸ் சாதனை படைத்தார்.
ஏற்கனவே பல தாவல்கள்களில் வென்ற இவர் பல அடி உயரத்தில் இருந்து தாவ முன்வந்தார்… மார்ச் 15, 2012 அன்று (71,581 அடி) இருந்து 2 சோதனை தாவல்களில் முதல் வெற்றிகரமாக எட்டு நிமிடங்களில் முடித்து 3வது ஆளாக மாறினார்.
அதுப்போன்ற பலத்தாவல்களினை வென்ற அவர் ஒக்டோபர் 14ம் திகதி 2012 தனது சாதனை பயணத்தை ஹீலியம் பலுானில் ஆரம்பித்தார் அதுவரை விண்ணிலிருந்து தாவிய பதிவாக 119,431 அடி உயரம் தான் இருந்தது.
ஆனால் பெலிக்ஸ் 127,852 அடி உயரத்தில் இருந்து குதித்து நியு மெக்ஸிகோவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளார். தரையிறங்கும் இடைப்பட்ட நேரத்தில் தனது நிதானத்தையும் பார்வையும் இழந்த பெலிக்ஸ் சரியாக தரையிறங்க மாட்டார் என எத்தணித்த ரெட்புல் நிறுவனம் பதட்டம் அடைந்தது. தொடர்பை மேற்கொண்ட படியே நிறுவனம் இருக்க … பல நொடிகள் எந்தவொரு பதிலும் தராத பெலிக்ஸ் …. கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்தை அடைகிறார்.
பூமியின் தரைமட்டம் தெரிய பெலிக்ஸ் தனது விண்கல உடையிலிருந்து பாராசூட்டை விரித்து சில நொடிகளிலே தரைதட்டுகிறார்.
இப்படி உயிருடன் விளையாடும் விளையாட்டை யாரும் தெரிந்தும் கூட யாரும் செய்ய முன் வர மாட்டார்கள்.. ஆனால் பெலிக்ஸ் இன் இந்த துணிச்சலே கிண்ணஸ் சாதனையாக பதியப்பட்டது.