Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்400 ஆண்டுகால கலாச்சார பாரம்பரிய நிலையம் தீயில் கருகியது Fire Incident

400 ஆண்டுகால கலாச்சார பாரம்பரிய நிலையம் தீயில் கருகியது Fire Incident

- Advertisement -

Fire Incident Cultural Centre சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

டென்மார்க்கில் 400 ஆண்டுகால டென்மார்க் கலாச்சார பாரம்பரியம் தீப்பிடித்து எரிந்துள்ளதாக அந்நாட்டு கலாச்சார அமைச்சர் ஜாகோப் ஏங்கல்-ஷ்மிட் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனின் மத்தியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய பங்குச் சந்தை கட்டிடம் செவ்வாய்கிழமை (16) காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டின் போர்சன் நகரின் பழமையான கட்டிடங்களில் ஒன்றாகும். இது “தி ஃபோல்கெட்டிங்” எனப்படும் டென்மார்க்கின் பாராளுமன்றம் மற்றும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனை ஆகியவற்றிலிருந்து குறுகிய தூரத்திலுள்ள 1625 ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டிடமாகும்.

- Advertisement -

இந்த பங்குச் சந்தை கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இது தற்போது டென்டமார்க் வர்த்தக சபையைக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உள்ளூர் கைவினை கலைஞர் ஹென்ரிக் கிரேஜ், “இது ஒரு சோகமான நாள். இது எங்கள் நோட்ரே-டேம்“ என 2019 ஆம் ஆண்டு பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். நாற்பது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அவசரகால சேவைகளுடன் கட்டத்தை கடந்து சென்ற குடியிப்பாளர்கள் மற்றும் டென்மார்க் வர்த்தக சபையின் பணிப்பாளரான பிரையன் மிக்கெல்செனிலும் இணைந்து கலைப் பொக்கிஷங்களை பாதுகாத்துள்ளனர்.ஸ்லாட்ஷோல்மென் தீவிலுள்ள இந்த டச்சு மறுமலர்ச்சி கால கட்டிடம் கோபன்ஹேகனை ஒரு பெரிய வர்த்தக மையமாக மாற்றும் நோக்கத்துடன் டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது.

Dubai Floods  உலக காலநிலை செய்திகள்
Dubai Floods  உலக காலநிலை செய்திகள்

பங்குச் சந்தை கட்டிடத்தில் தீயில் கருகி சரிந்து வீழ்ந்த கோபுரத்தில் செங்குத்தாக முறுக்கப்பட்ட நான்கு டிராகன்களின் வால்கள் மற்றும் மூன்று கிரீடங்கள் அண்டைய நாடான நோர்வே மற்றும் ஸ்வீடனுடனான நெருங்கிய உறவைக் குறிப்பதாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Kidhours – Fire Incident Cultural Centre

 

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

சிறுவர் சிந்தனைகள்

தேடல்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.