இந்தோனேசியாவின் வடக்கு மாநிலத்தின் சுமத்ரா என்ற பகுதியில் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றை சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சிய கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள பின்ஜாய் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்று நீண்ட கால்மாக இயங்கி வருகிறது.
அங்கு கணப்படுகின்ற களஞ்சிய கிடங்கில் (21.06.2019) வழக்கம்போல் தீப்பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தன அவ்வேளை திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்ட ஒலியானது அந்த பகுதியை அதிர செய்தது அதன்போது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் அனைத்தும் பற்றி எரிந்தன அதுடன் ஏராளமான சொத்துக்கள் அழிந்துததுடன் விபத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். குறித்த் விபத்தில் இறந்த சிறுவர்களோ அல்லது குழந்தைகளோ யாரும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இல்லை.
சிறுவர்களை தனியே வீட்டில் விடாது அவர்களை தொழிற்சாலையில் வேலைக்கு வரும் பெற்றோர்கள் குழந்தைகளை உடன் அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அழைத்து வந்த சிறார்களே இவ் விபத்தில் உயிரிழந்தனர் என்று பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தார்.