Europe Oil Leakage சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஐரோப்பாவின் Nord Stream குழாய்களில் ஏற்பட்ட எரிபொருள் கசிவால் நாடுகள் ஒன்றை மற்றொன்று பழிசுமத்தத் தொடங்கியிருக்கின்றன.
அமெரிக்கா அந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று ரஷ்யா கூறியதை வாஷிங்டன் மறுத்துள்ளது.
அதில் தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ரஷ்யா கூறுகிறது. அந்தக் குழாய்களில் ஏற்பட்ட எரிபொருள் கசிவால் ஒட்டுமொத்தக் கண்டத்தின் எரிசக்திப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன் தொடர்பில் அனைத்துலகப் பயங்கரவாத விசாரணையை ரஷ்யா ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
முக்கிய எரிவாயுக் குழாய்கள் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டிருப்பதாக அது கூறிற்று. ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அதுகுறித்து நாளை விவாதிக்கவிருக்கிறது.
சுவீடன், டென்மார்க் ஆகியவற்றின் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் அந்தக் கசிவு ஏற்பட்டதால், கூடுதல் விவரம் தருமாறு அவை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
Kidhours – Europe Oil Leakage News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.