Thirukkural 291 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால்/ துறவறவியல்/வாய்மை
“வாய்மை எனப்படுவது யாதெனி யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”
‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
—மு. வரதராசன்
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
—சாலமன் பாப்பையா

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 291
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.