Earthquake News Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜப்பானின் தென்மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் கியூஷூ தீவு பகுதியருகே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இன்று அதிகாலை 1.08 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தததாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஜப்பானின் மியாஜகி, ஒய்டா, கொச்சி மற்றும் குமமோட்டோ ஆகிய மாகாணங்களில் 5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.
இவற்றில் ஒய்டா மாகாணத்தில் 6 பேர் காயமடைந்து உள்ளதுடன் மியாஜகி மாகாணத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.