
சந்திரன் அல்லது சூரியன் போன்ற கிரகங்கள் மற்றொரு கிரகத்தின் நிழலுக்கு நகரும் போது ஒரு கிரகணம் நிகழ்கிறது. பூமியில் மட்டும் இரண்டு வகையான கிரகணங்களை சந்திக்க முடியும். அவை சூரிய கிரகணங்கள் மற்றும் சந்திர கிரகணங்கள். சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகியவை சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்க்கோட்டில் சீரமைக்கப்படும் போது ஏற்படும் நிகழ்வுகளாகும்.
சூரிய கிரகணமானது சந்திரன் சூரிய ஒளியின் வழியில் வந்து அதன் நிழலை பூமியில் செலுத்தும் போது நிகழ்கிறது. சந்திர கிரகணமானது சூரியனின் ஒளி சந்திரனைத் தாக்கும் வழியில் பூமி வரும் போது நிகழ்கிறது. 2020 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம் டிசம்பர் 14 அன்று நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படவில்லை. ஆனால் 2021 ஆம் ஆண்டில் இன்னும் நான்கு கிரகணங்கள் நடக்கவிருக்கின்றன. கீழே வரவிருக்கும் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் முழுமையான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் 2021: மே 26 (முழு சந்திர கிரகணம்)
2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் பிற்பகல் 2:17 மணிக்கு தொடங்கி இரவு 7:19 மணிக்கு முடிவடையும். மேலும் இது தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் தெரியும்.
சூரிய கிரகணம் 2021: ஜூன் 10 (வருடாந்திர சூரிய கிரகணம்)
2021 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் 10 ஆம் தேதி அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணம் நிகழப் போகிறது. இது மதியம் 1:42 மணியளவில் தொடங்கி மாலை 6:41 மணிக்கு முடிவடையும். இந்த சூரிய கிரகணத்தை ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் ஆகிய பகுதிகளில் இருந்து காணலாம்.

சந்திர கிரகணம் 2021: நவம்பர் 18-19 (பகுதி நேர சந்திர கிரகணம்)
இந்த சந்திர கிரகணம் ஒரு பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். இது காலை 11:32 மணிக்கு தொடங்கி மாலை 6:33 மணிக்கு முடிகிறது. இந்த பெனும்பிரல் கிரகணம் ஐரோப்பாவின் பெரும்பகுதி, ஆசியா, ஆஸ்திரேலியா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆர்டிக் பகுதிகளில் தெரியும்.
சூரிய கிரகணம் 2021: டிசம்பர் 4 (முழு சூரிய கிரகணம்)
இந்த கிரகணம் ஒரு இடத்தில் தொடங்கி மற்றொரு இடத்தில் முடிகிறது. இது முழு சூரிய கிரகணமாக இருக்கும். அதுவும் இது காலை 10:59 மணிக்கு தொடங்கி மாலை 03:07 மணிக்கு முடிவடையும். 2021 ஆம் ஆண்டின் கடைசி கிரகணமானது இது ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதி, தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவின் தெற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.