Thursday, November 21, 2024
Homeகல்விகட்டுரைகட்டுரை அனர்த்த முகாமைத்துவம் Disaster Management Essay in Tamil

கட்டுரை அனர்த்த முகாமைத்துவம் Disaster Management Essay in Tamil

- Advertisement -

Disaster Management Essay in Tamil  சிறுவர் கட்டுரை

- Advertisement -

மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை வௌ;வேறு சந்தர்ப்பங்களில் மனித வாழ்கைக்கு சவாலாக அமையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் அனர்த்தங்களினால் ஏற்படக் கூடிய சவால் பாரியதொன்றாக காணப்படுகின்றது. அனர்த்தமானது 2 வகைப்படுகின்றது.

  1. இயற்கை அனர்த்தங்கள்
  2. மனித செயற்பாடுகளினால் ஏற்படும் அனர்த்தங்கள்

இயற்கை அனர்த்தங்கள் என்பது புவியிலும் அதன் அயற்சூழலிலும் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் பாதிப்பான நிலையே இயற்கை அனர்த்தமாகும். மனிதத் தலையீடின்றி இயற்கைச் சூழலில் நிகழும் பல்வேறு மாற்றங்களினால் இயற்கையாக ஏற்படும் செயற்பாட்டால் மனிதனுக்கும் அவனது சொத்துக்கும் பாதிப்புக்கள் எற்படுமாயின் அவற்றை இயற்கை அனர்த்தங்கள் எனலாம்.

- Advertisement -

இவை 2 வகைப்படுகின்றன:

- Advertisement -
  1. புவியினுள் நிகழும் பௌதீகச் செயற்பாடுகள்

சுனாமி,புவியதிர்வு,புவியசைவு,நிலச்சரிவு

  1. காலநிலை மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள்

வெள்ளப்பெருக்கு,வரட்சி,சூறாவளி,இடிமின்னல்,காட்டுத்தீ

அனர்த்த முகாமைத்துவம் என்பது, ‘பூமியை தமது வாழிடமாகக் கொண்ட மனிதன் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இயற்கை நிகழ்வுகளை (இயற்கை இடர்கள்,அனர்த்தங்களை) பூமியில் முழுதாக நிறுத்தவோ தடுக்கவோ முடியாது விட்டாலும், பூமியில் அனர்த்தங்கள் ஏற்படும் வலயங்கள், காலங்கள், அளவுகள், எண்ணிக்கைகள் என்பவற்றை மரபுரீதியான முறைகள்,நவீன நுட்ப முறைகள் என்பவற்றை பயன்படுத்தி இயற்கை நிகழ்வுகளின் நிலைமைகளுக்கு ஏற்ப அவற்றினால் ஏற்படும் தாக்கம், பாதிப்புக்களை குறைத்து தவிர்க்கக் கூடிய வகையில் முகாமை செய்யலாம்.’ இதனையே அனர்த்த முகாமைத்துவம் எனலாம்.

Disaster Management Essay in Tamil
Disaster Management Essay in Tamil

அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் வைத்துள்ளன.பேரிடர்கள் நேரிடும்போது மனித உயிர் இழப்புகள், பொருளாதார இடர்பாடுகளை களையவும் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர் .பூகம்பம் ,எரிமலைவெடிப்பு,புயல்,பெரும்தோற்று போன்ற காலங்களில் அவசர உதவிக்கு பேரிடர் மேலாண்மை வாரியங்களே பொறுப்பெடுத்து கொள்கின்றனர்.பேரிடர்மலாண்மை பற்றிய கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன.

மனித சக்தியை முழுவதுமாக முடக்கும் பேரிடர் காலங்களில் செயல்படுகிறது. ஒவ்வொரு மனித உயிரையும் காக்கும் நோக்குடனேயே இந்த ஆணையம் செயல்படுகிறது. சமூக வேறுபாடுகள் ,பொருளாதார வேறுபாடுகள் என எந்த வட்டங்களுக்கும் இல்லாமல் மனித உயிரை காப்பதே தனது முதல் கடமையாக கொண்ட சட்டமுடையது.

துரிதமாக செயல்பட இராணுவ தளவாடங்கள்,இராணுவ வீரர்கள்,காவலர்கள்,மருத்துவக் குழுக்கள்,முதன்மை பணியாளர்கள் என்று இந்த குழு அமைக்க பட்டுள்ளது. தனி தனியாக அரசு பணிகளில் இருந்தாலும் பேரிடர் காலங்களில் தங்களுக்கு கொடுக்க பட்ட பேரிடர் மேலாண்மை பணிகளை இவர்கள் செய்கின்றனர்.

இவர்களது சாதனைகளாக அம்பன் புயலின்போதும் , கோரோனோ பெரும்தோற்று காலங்களிலும்,வெள்ளத்தின் போதும் நாம் கண்கூடாக கண்டுள்ளோம்.
பேரிடர் காலங்களில் நம்மை காப்போதோடு மட்டும் அவர்கள் கடமை முடிவடைந்து விடுவதில்லை.பேரிடர் துயரங்களை களைந்து மனித சக்தியை நல்வழிப்படுத்தி தற்காலிக தீர்வுகளையும் , நீண்ட கால மறுவாழ்வு திட்டங்களான பாதுகாப்பான வாழ்விடத்தை அமைத்து கொடுத்தல் , மறுவாழ்விற்க்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் வரை ஒரு பேரிடர் மீட்பு நடவடிக்கை நீள்கிறது.சுனாமி காலங்களில் ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பை சரி செய்ய தற்காலிக குடில்களை மட்டும் அமைக்காமல் பாதிக்க பட்ட அனைவருக்கும் புதுவாழ்வு திட்டங்களை அரசு புனரமைத்ததனை உதாரணமாக சொல்லலாம்.

Disaster Management Essay in Tamil
Disaster Management Essay in Tamil

மனித உயிர் பாதுகாப்புக்கு அடுத்து இந்த மேலாண்மையின் அடுத்த வேலை ,பேரிடரினால் ஏற்பட்ட இயற்கை இழப்புகளை ஈடுசெய்தல் ஆகும், பேரிடரினால் சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் சொத்துக்களும் பயனற்றதாக மாறிவிடுகின்றன, அப்படிப்பட்ட காலங்களில் அவர்களுக்கு சீரமைப்பு நிதி போன்ற உதவிகளை செய்கிறது.

தனிமனித சொத்துக்கள் மட்டும் அல்லது பொது சொத்துக்களையும் மீண்டும் மனிதர்களுக்கு உதவும் வகையில் புனரமைத்து இந்த மேலாண்மை வாரியத்தின் கடமையாகும்.
பேரிடர் களங்களில் அரசு எவ்வளவு உதவிகள் செய்தலும் அருகில் இருக்கும் மனிதர்களின் உடனடி உதவியே பேருதவியாக எப்போதும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை பேரிடர் காலங்களில் உணவு வழங்குதல், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்,போன்ற செயல்களை குழுக்களாக தனிமனிதர்கள் செய்வது இயல்பானதாக உள்ளது.இவற்றை கஜா புயலின் போதும் ,சுனாமியின் போதும், கோரோனோ பெரும்தோற்று காலங்களிலும் நாம் கண்கூடாக கண்டோம்.

 

kidhours – Disaster Management Essay in Tamil , Disaster Management Essay

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.