Sunday, February 23, 2025
Homeசிறுவர் செய்திகள்இந்தோனேசியாவில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ் - Different Corona virus spread in Indonesia

இந்தோனேசியாவில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ் – Different Corona virus spread in Indonesia

- Advertisement -

இந்தோனேசியாவில் பரவி வரும் கொரோனா வைரசின் வகை மற்ற நாடுகளிடமிருந்து மாறுபட்டு இருப்பதாக அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.

- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ், மற்ற உலக நாடுகளில் பரவி வரும் வைரசிடமிருந்து மாறுபட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. அங்கு பரவி வரும் கொரோனா வைரசின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

- Advertisement -

இது தொடர்பாக அந்நாட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாம்பங் பிராட்ஜாங்கொரோ கூறுகையில், “ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 3 விதமாக கொரோனா வைரஸ் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தோனேசியாவிலிருந்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட வைரசின் மாதிரிகள் இதுவரை கண்டறியப்படாத வகைகளில் ஒன்றாகும். எனினும் இவை வைரசின் உருமாற்றம் மற்றும் தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவிகரமாக அமையும்” என்றார்.

- Advertisement -

இந்தோனேசிய தீவுக்கூட்டங்களில் பரவி வரும் கொரோனா வைரசின் மாதிரிகள் ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.