ஐரோப்பிய ஒன்றியத்தினால் GSP+ சலுகையானது 2005 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக இலங்கை GSP சலுகையையே 1971 ஆம் ஆண்டு முதல் பெற்று வந்துள்ளது. GSP மூலமாக இலங்கை முழுமையான வரிவிலக்கை பெறுவதில்லை.
மாறாக ஏற்றுமதி, இறக்குமதி வரிச்சலுகையை (ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவான வரி அறவிடப்படும்) மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
அத்துடன், இத்தகைய சலுகையை ஐரோப்பிய ஒன்றியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள், சேவைகளுக்கு மாத்திரமே பெற்றுக்கொள்ள கூடியதாகவும் இருந்தது.
ஆனால், GSP + ஐரோப்பிய ஒன்றியத்தினால் தெரிவு செய்யப்பட்ட 13 அபிவிருத்தி நாடுகளும் இலங்கையையும் (2005 – 2010) உள்ளடக்கி முழுமையான வரி விலக்கை பெற்றுத்தருகின்ற திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் போர் சார்ந்த ஆயுதங்கள் தவிர்த்து எந்தவகையான பொருட்கள், சேவைகளையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு GSP + திட்டத்தினூடாக வழங்கமுடியும்.
இதனை 2005 ம் ஆண்டின் ஆரம்பம் முதல் இலங்கை பெற ஆரம்பித்தது. GSP + திட்டத்தினுள் இலங்கை உள்வாங்கப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்றாக 2004 ம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் ஒரு காரணமாகும்.