![சிறுவர்களுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’ Detox Diet for kids..? 1 detox-diet-is-good-for-kids-kidhours.jpg](https://www.kidhours.com/wp-content/uploads/2019/06/detox-diet-is-good-for-kids-kidhours-1.jpg)
‘டீ டாக்ஸ் டயட்’ என்பது என்ன, அதனை குழந்தைகளும் பின்பற்றலாமா? என்ற கேள்விகளுக்கு இங்கே விடை காணலாம்.
ஒரு நாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்கு பதிலாக வெறும் பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக சாப்பிடுவது அல்லது காய்கறிகளை வேகவைத்து சாப்பிடுவதுதான் ‘டீடாக்ஸ் டயட்’.
![சிறுவர்களுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’ Detox Diet for kids..? 2 Detox-nutrition-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2019/06/Detox-nutrition-kidhours.jpg)
உயரத்துக்கேற்ற எடையும், நேர்த்தியான உடலமைப்பும் கொண்ட குழந்தைகளைப்பற்றி கவலை கொள்ள தேவையில்லை. சிலர் ஒல்லியாக இருந்தாலும் தொப்பை வெளியே தள்ளி இருக்கும். இவர்களின் உணவுப்பழக்கத்தைத்தான் கவனிக்க வேண்டும். தேவைக்கும் அதிகமான கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை கொடுப்பதாலேயே இதுபோன்ற உடல் அமைப்பு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, குழந்தைகளுக்கு புரத உணவுகளை அதிகமாக கொடுத்து பழக்க வேண்டும். மனிதனின் உடல் கட்டமைப்புக்கு புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது என்பதுடன் உயரமாக வளர்வதற்கும் புரதம் அவசியமானது.
![சிறுவர்களுக்கு வேண்டுமா ‘டீ டாக்ஸ் டயட்’ Detox Diet for kids..? 3 detox-kidhours](https://www.kidhours.com/wp-content/uploads/2019/06/detox-kidhours.jpg)
எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்துக் கொண்டு புரதம், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இது அவர்களின் உடல்பருமனை குறைத்து ஆரோக்கியமாக வளர உதவும். பெரியவர்கள் எடுத்துக் கொள்வதுபோல் பழங்கள், காய்கறிகள் அல்லது ஜூஸ் போன்ற ‘டீடாக்ஸ்‘ உணவுகளை மட்டுமே கொடுக்கக்கூடாது. இது, குழந்தைகளின் மூளை ஆற்றலை குறைப்பதோடு, கவனக்குறைவையும் ஏற்படுத்தும். மேலும் ஓடி ஆடி விளையாடும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையவும் வாய்ப்பு உள்ளது.
பெரியவர்களை போல சமநிலைப்படுத்திக் கொள்ளத் தெரியாது. குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகை பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம். குழந்தைகளின் எடை குறைய உணவுக்கட்டுப்பாட்டு மட்டுமே சரியான வழி அல்ல. அவர்களை ஓடி ஆடி விளையாட விடவும் அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைப்பதும் அவசியம்.