உலகின் பல்வேறு நாடுகளும் டெல்டா கொரோனா பரவல் தடுத்து நிறுத்த திணறிக் கொண்டிருக்கும் நிலையில், மிகச் சரியான நடவடிக்கைகள் மூலம் வெறும் ஒரே மாத்தில் டெல்டா கொரோனாவை சீனா முழுவதுமாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தான் உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த நாட்டினாலும் கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அதிலும் இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், இதைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகள் மத்தியில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. டெல்டா கொரோனா அப்படி தான் கடந்த ஆண்டு இந்தியாவில் உருமாறிய டெல்டா கொரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை மிக மோசமான நிலைக்குச் செல்ல டெல்டா கொரோனா தான் முக்கிய காரணமாக இருந்தது.
இந்தியாவைத் தொடர்ந்து தற்போது பல்வேறு உலக நாடுகளிலும் டெல்டா கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையைச் சிறப்பாகக் கையாண்ட சீனாவிலும், கடந்த சில வாரங்களுக்கு முன், டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
சீனா முதல் அலையில் தப்பிய பல்வேறு நாடுகளும்கூட டெல்டா கொரோனாவால் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டன. அதேபோல சீனாவும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டெல்டா கொரோனாவையும் சீனா வெற்றிகரமாக முறியடித்துவிட்டது. டெல்டொ கொரோனா பாதிப்பு தொடங்கிய ஒரே மாதத்தில் அதைச் சீனா கட்டுப்படுத்தியுள்ளது.
எப்படிப் பரவியது கடந்த ஜூலை மாதம் இரண்டாவது வாரம் சீனாவில் டெல்டா கொரோனா பரவ தொடங்கியது. நாஞ்சிங் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த பணியாளர் ஒருவர் மூலம் வைரஸ், டெல்டா கொரோனா சீனாவில் பரவியது. வூஹான் தொடங்கி சீனாவின் பல்வேறு நகரங்களிலும் டெல்டா கொரோனா பரவ தொடங்கியது. சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.
சீனாவின் நடவடிக்கை இதனால் உடனடியாக சுதாரித்துக் கொண்ட சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. முதல் அலை சமயத்தில் எடுத்து அதே நடவடிக்கைகளைத் தான், சீனா இந்த முறையும் எடுத்தது. முதலில் தேவையற்ற போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதேபோல வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரே மாதம் அத்துடன் நிற்காமல் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த நகரங்களில் வசித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் கொரோனா இருப்பவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தப்பட்டனர்.
முதல் அலை சமயத்திலும் இதே நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பாதிப்பைச் சீனா தடுத்திருந்தது. இப்போது அதே நடவடிக்கைகளுடன் வேக்சின் பணிகளும் இணைந்து கொள்ள டெல்டா கொரோனாவை கூட ஒரே மாதத்தில் சீனா கட்டுப்படுத்திவிட்டது. வேக்சின் பணிகள் சீனாவின் சினோவாக், சினோபார்ம் ஆகிய வேக்சின்கள் 60% வரை டெல்டா கொரோனாவுக்கு எதிராகப் பலன் தருகிறது.
வேக்சின் பணிகளைச் சீனா மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதேநேரம் இதுவரை அங்கு எத்தனை பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள்தொகையில் 70% பேருக்கு வேக்சின் போட்டிருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு சீனா நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.