கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, கேரள போலீசார் வெளியிட்டுள்ள பாடல் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், தமிழில் வெளியாகியுள்ள, ‘என்ஜாயி என்சாமி… குக்கூ குக்கூ’ என்ற பாடல் இசையில், மலையாள பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பெண் போலீசார் உட்பட, ஒன்பது போலீசார் சீருடையில் நடித்துள்ளனர். திருவனந்தபுரம் சங்குமுகத்தில் நடன காட்சி படப்பிடிப்பு நடந்தது.
நஹும் ஆப்ரகாம், நிளா ஜோசப் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இந்த பாடல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பாடலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் அவசியம் பற்றியும், அனைவரும் மாஸ்க் அணிவதோடு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கேரளா போலீஸ் வழி
எப்போதும் தனி வழி.எப்படியாவது விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சரி #WearAmask #Getvaccinated pic.twitter.com/ZQwFKKDYIS
— Arjun Saravanan (@ArjunSaravanan5) April 28, 2021