Cryptocurrency in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் பாரிய வர்த்தக முறைமைகொண்ட கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது
அதாவது நேற்று (21) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.
இந்த பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம் என்றும், இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதன் பங்குதாரர்கள் மத்தியில் பெரும் பயத்தினையும் உருவாக்கியுள்ளது.
Kidhours – Cryptocurrency in Tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.