Saturday, February 22, 2025
Homeபொழுது போக்குஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள சிறுவர்களால் முடியும்..!

எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள சிறுவர்களால் முடியும்..!

- Advertisement -
best-kids-sprinkler-kidhours
best-kids-sprinkler-kidhours

சிறிய குழந்தைகள் விளையாட்டுகளை விரும்புகிறார்கள்.எதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியும்.இன்று காலை லிசா தனது அக்காள் நீலுடன் படுக்கையில் இருந்தாள்.படுக்கைக்கு மேல் எரிந்த விளக்கை நீல் முதலில் அணைக்க வேண்டும்.பிறகு லிசா அதை மீண்டும் போடுவாள்.”விளக்கை அணைக்காதே”என்பாள்.

- Advertisement -


உடனே அக்காள் நீல் தனது கையை மெது – மெதுவாக விளக்கை நோக்கி நீட்டுவாள்.நீல் கை ஒவ்வொரு முறை நீளும் போதும் லிசா சொல்வாள்,”விளக்கை அணைக்காதே”. இது நீண்ட நேரத்துக்கு நீடிக்கும்.இறுதியாக விளக்கணைக்கப்பட்டு லிசா மீண்டும் விளக்கைப் போடுவாள். விளையாட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்கும்.

kids-feathers-outside-kidhours
kids-feathers-outside-kidhours


ஒரு தற்செயல் நிகழ்வில் இருந்து கூட சிறு குழந்தைகள் ஏராளமான விளையாட்டுகளை உருவாக்குகிறார்கள்.ஒரு நாள் அறையில் கிடந்த ஒரு பத்திரிக்கையை எடுத்து மேசை மீது வைத்து விட்டு நான் எனது வேலைகளை கவனிக்க சென்று விட்டேன்.லிசா மேசைக்குச் சென்று அதிலிருந்த பத்திரிக்கையை எடுத்து மீண்டும் தரையில் போட்டாள்.அதன் பிறகு என்னைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள்.நான் திரும்பிச் சென்று அதை மீண்டும் மேசை மேலே வைத்தேன்.உடனே அவள் சென்று அதை எடுத்தாள்.உடனே புது விளையாட்டு தொடங்கியது.இந்த விளையாட்டு 40 நிமிடம் நீடித்தது…

- Advertisement -
kids-playing-in-garden-kidhours
kids-playing-in-garden-kidhours


இத்தகைய விளையாட்டுகளின் தாத்பரியம் என்னவென்றால் மகிழ்ச்சி, சந்தோஷம், ஆகியவை தான்.மற்றெந்த நல்ல விளையாட்டுகளையும் போல இதன் பின்பும் இருப்பது நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவது; இதைத் தான் நாம் கல்வி என்று அழைக்கிறோம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.