சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் மட்டும் வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது. 8,100 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து சிங்கப்பூர் ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.திருச்சூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 1,053 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதனிடையே சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் கூடிய உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளது.இந்த முடிவால் சர்வதேச அளவில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நிதி திரட்ட முடியும். ஆனால் அதேநேரம் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பிற நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும் நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இதனிடையே சீனாவின் ஹூபே மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர இன்று இரு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
முதல் விமானம் கொரோனா முதன்முதலில் பரவிய ஊஹானில் இருந்து இன்று மாலை புறப்படும் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மற்றொரு விமானம் ஹூபே மாகாணத்தின் வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர உள்ளது. இவ்வாறு நாடு திரும்பும் இந்தியர்கள் 14 நாட்கள் தனியாக வைத்து கண்காணிக்கப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
kidhours-news
#coronavirus#mers virus#coronavirus in dogs#mers cov
#canine coronavirus#sars coronavirus#mers disease#coronaviridae
mers coronavirus#corona disease#mers cov virus#mers symptoms#mers cov symptoms
coronavirus oc43#human coronavirus#coronavirus symptoms