Monday, January 20, 2025
Homeசிறுவர் செய்திகள்கொரோனா வைரஸ் பாதிப்பு -சீனா பிரமாண்ட மருத்துவமனையை கட்டும் பணி

கொரோனா வைரஸ் பாதிப்பு -சீனா பிரமாண்ட மருத்துவமனையை கட்டும் பணி

- Advertisement -

மத்திய சீனாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊஹான் நகரில் கடல் உணவு விற்பனையகத்தில் இருந்து கடந்த டிசம்பர் முதல் பரவத் தொடங்கியது. சீனாவில் 9-க்கும் மேற்பட்டோரை பலி கொண்டிருப்பதுடன் மேலும் 450-பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

- Advertisement -
coronavirus
www.kidhours.com

நோய் பரவலிலிருந்து காத்துக்கொள்ள சீன மக்கள் முகக்கவசம் அணிந்தே வெளியில் செல்கின்றனர். 2002ம் ஆண்டில் சீனாவில் இருந்து 37 நாடுகளுக்குப் பரவி 774 பேரை பலி கொண்ட சார்ஸ் வைரஸை போலவே கொரோனா வைரசும் உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளை சோதனையிட இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் விமான நிலையங்களில் ஏற்பாடுகளை செய்துள்ளன. சீனாவுக்கு செல்வோர் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கொத்து கொத்தாக காணப்படும் கரோனா வைரஸ்களை மைக்ரோஸ்கோப் வழியே பார்த்தால் மகுடம் போல் காட்சி அளிக்கின்றன, லத்தீன் மொழியில் “கரோனா” என்பதற்கு மகுடம் எனப் பொருள். அதை குறிக்கவே கரோனா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கரோனா வைரசை ஆறு வகைகளாக பிரித்துள்ள மருத்துவர்கள் வழக்கமாக விலங்குகளிடையேதான் இவை காணப்படும் என்றும் மனிதர்களின் உயிரை குடிக்கும் கொலைகார வைரஸாக மாறியது இதுவே முதல் முறை என்றும் கூறுகின்றனர்.

- Advertisement -

இது வழக்கமான சளித்தொல்லை போல் இருமல். தொண்டை செருமல், தலைவலி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளையும் ஆஸ்துமா அறிகுறிகளையும் கொண்டிருப்பதாகவும், முதியோர்- சிறுவயதினர் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்தோரை எளிதில் தொற்றி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

கொரோனா வைரஸ்.., இருமல், தும்மல், கைகுலுக்கல் மூலம் பரவும் என்றும் நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டபின் வாய், கண்கள் மற்றும் மூக்கை தொட்டால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றினால் காய்ச்சலுக்கு தரும் மருந்துகளையே தரும் மருத்துவர்கள் திரவ உணவு, ஓய்வு மற்றும் தூக்கம் தேவை என்கிறனர். இதற்கு தடுப்பூசி ஏதும் கிடையாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே பெரிதும் காப்பாற்றும், விலங்குகள் அருகில் செல்வதையும், உடல் நலம் குன்றியோர் அருகில் செல்வதையும் தவிர்க்கும்படி சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. சீன அரசும் மனிதர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சீனாவின் ஊஹானில் இருந்து தாய்லாந்து கொரியா ஜப்பான் வரை பரவி தற்போது அமெரிக்காவையும் அச்சுறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்தது உலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. சார்ஸ் பரவியபோது உலகச்சந்தையில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதுபோல் கொரோனா வைரசும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா என்ற ஒரு புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரு பிரம்மாண்ட மருத்துவமனையை சீனா விரைவாக உருவாக்கி வருகிறது. அந்த நாட்டில் இதுவரை இந்த வைரஸ்க்கு நாற்பது பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பத்துக்கும் மேற்ப்பட்ட நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக நோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக அறியப்படும் ஹூகான் மாகாணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை ஒன்றை கட்டிமுடிக்க அம்மாகாண அரசு முடிவு செய்து அதற்க்கான பணிகளை துவங்கியுள்ளது.

coronavirus
www.kidhours.com

ஆயிரம் படுக்கைகளை கொண்டதாக கட்டப்படும் இந்த மருத்துவமனை 25,000 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகிவருகிறது. பிப்ரவரி 3 முதல் புதிய மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus
www.kidhours.com

பலநூறு கட்டுமான இயந்திரங்களும் தொழிலாளர்களும் தற்போது இந்தப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்தே நாட்களில் ஒரு பிரமாண்டமான் மருத்துவமனை என்ற சீனாவின் இந்த வேகம் உலகநாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

kidhours news

#virus#dengue fever#dengue mosquito#dengue virus#viral fever#ebola virus
japanese encephalitis#chikungunya#ebola#dengue hemorrhagic fever#influenza virus
dengue treatment#dengue prevention#nipah virus#zika virus#rabies virus#hand foot and mouth#dengue fever treatment#viral infection#hand foot mouth disease treatment
adenovirus#epstein barr virus#coxsackievirus#dengue fever prevention#chickenpox virus
herpangina#cmv#mumps virus#types of viruses#norovirus#poliovirus#machupo virus
arbovirus#hand foot and mouth disease treatment#ebv#viral diseases#rhinovirus
cmv infection#bird flu#mosquito diseases#dengue shock syndrome#ebola virus disease
measles virus#coronavirus#chikungunya virus#coronavirus

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.