US Earth Quake உலக காலநிலை செய்திகள்
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் , எனினும் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 5:35 மணிக்கு மிட்லாண்டிலிருந்து வடமேற்கே 22 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மிதமான நிலநடுக்கம், வடக்கு டெக்சாஸ் பன்ஹேண்டில் அருகே உள்ள லுபாக் வரை, மிட்லாண்டிற்கு தென்மேற்கே 20 மைல் தொலைவில் உள்ள ஒடெசா வரையிலான ஒரு பெரிய பகுதியில் உணரப்பட்டது.
Kidhours – US Earth Quake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.