Christmas Tree News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜெர்மன் ஜோடி தங்களது வீட்டில் சுமார் 444 கிறித்துமஸ் மரங்களை வைத்து சாதனை படைத்துள்ளனர். மார்கழி மாதம் பிறந்ததில் உலகின் பல்வேறு நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
கிறிஸ்துமஸ் ஆரம்பித்தாலே வீடுகள் மற்றும் நகர வீதிகளில் வண்ண விளக்குகள் அலங்காரங்கள் ஜொலிக்கும். கிறித்துமஸ் பண்டிகையின் போது ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் கிறித்துமஸ் மரங்களை வைத்து அதில் பல வண்ண விளக்குகள் மற்றும் பொருட்களை கொண்டு அலங்காரம் செய்து வைப்பர்.
ஆனால் இங்கு ஒரு ஜெர்மன் ஜோடி தங்களது வீட்டில் சுமார் 444 கிறித்துமஸ் மரங்களை வைத்து சாதனை படைத்துள்ளனர்.மரம் சேகரிப்பாளர்களான தாமஸ் மற்றும் சூசன் ஜெரோமின் என்ற ஜெர்மன் தம்பதி தங்களது 105 சதுர அடி வீட்டை 444 கிறிஸ்துமஸ் மரங்கள், ஃபேரி விளக்குகள் மற்றும் சுமார் 16,000 பாபிள்களால் அலங்கரித்துள்ளனர். மரங்களை அலங்காரம் செய்ய அவர்களுக்கு சுமார் எட்டு வாரங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
ICYMI: Thomas and Susanne Jeromin set up a total of 444 Christmas trees decorated head to toe with baubles, tinsel and lights in their home. The couple were certified as world record holders for the most Christmas trees in one place pic.twitter.com/raITQNGMu7
— Reuters (@Reuters) December 11, 2021
தங்கள் வீட்டில் அலங்கரிக்கப்படாத ஒரே அறை அவர்களின் படுக்கையறை மட்டுமே என்று சுசான் ஜெரோமின் கூறியுள்ளார். ஏனெனில் “நமக்கு கிறிஸ்மஸ் போதுமானதாக இருக்கும் போது இது எங்கள் ரீட்ரீட் பண்டிகைக்கு உதவியாக இருக்கும் என சுசான் கூறியுள்ளார்.
ரியூட்டர்சில் வெளியான அறிக்கையின்படி, இந்த ஜோடி ஒரே இடத்தில் அதிக கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்ததற்காக உலக சாதனை படைத்தவர்கள் என்று சான்றளிக்கப்பட்டது. , இதனை குறித்த தம்பதி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
kidhours- Christmas Tree News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.