கடந்த வியாழன்று பீஜிங்கில் ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படும் கல் மழை பெய்தது. கல் மழையே ஆச்சரியமானதுதான் என்னும்போது, பீஜிங்கில் பெய்த கல்மழை இன்னமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கல்மழையின்போது வானத்திலிருந்து விழும் பனிக்கட்டிகள் உருண்டையாக இருக்கும். ஆனால், இந்தமுறை பீஜிங்கில் பெய்த கல்மழையின்போது விழுந்த பனிக்கட்டிகள் கொரோனா வைரஸ் வடிவத்திலேயே இருந்துள்ளன.
வெளியான புகைப்படங்களில், கல்மழையின்போது விழுந்த பனிக்கட்டிகள், வழவழப்பாக வழக்கமான பனிக்கட்டி போல் இல்லாமல் கொரோனா வைரஸ் போல் கூர்மையான வெளிப்புறத்துடன் காணப்படுவதைக் காணமுடிகிறது.