Tuesday, January 21, 2025
Homeகல்விசிறுவர் உளவியல் கல்வி#Children-psychology-tamil

சிறுவர் உளவியல் கல்வி#Children-psychology-tamil

- Advertisement -

பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம்.

- Advertisement -

பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறது. பாடசாலைக்குச் செல்வதற்கும் அதிக விருப்பத்தை தெரிவிக்கிறது.

அதேவேளை இன்னும் சில பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து போவதையும் கண்டு அஞ்சுகிறது. பயப்படுகிறது. அழுது புலம்புகிறது. இவ்வாறான பிள்ளைகளை சமாளித்து நிதானப்படுத்துவதில் பெற்றோர்÷ஆசிரியர் பெரும் பாடுபடுவர்.இந்த பிள்ளைகளின் இவ்வாறான மனநிலைக்கு முக்கியமான இரு காரணங்களை மனோ வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

- Advertisement -

முதலாவது: பிள்ளைக்கும் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர் அறுந்து விடுவதால், பிள்ளை பாடசாலைக்குப் போக பயந்து அழுது அடம்பிடிக்கிறது. பிள்ளையிடம் காணப்படும் குறைகள் கோளாறுகளை ஆசிரியர் கண்டிப்புடன் தண்டிக்கும்போது ஆசிரியரின் சுபாவத்தைக் கண்டு பாடசாலைக்குப் போக அஞ்சுகிறது. பாடசாலையைப் பற்றி கதைத்தாலே பிள்ளை அஞ்சுவதற்கு இதுவே காரணம்.எல்லாப் பிள்ளைகளும் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை புரிந்து கொள்ளும் முறையில் மற்றப் பிள்ளை புரிந்து கொள்ளாது. ஒரு பிள்ளை சரியாக புரிந்து கொள்ளும் அதேவேளை மற்றப் பிள்ளை பிழையாக விளங்கிக் கொள்ளும்.

- Advertisement -
siruvar_ulaviyal
children-psychology-tamil

பிள்ளைகளிடத்தில் இவ்வாறான கோளாறுகள் இருப்பதை ஆசிரியர் புரிந்து கொண்டுதான் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளின் மனோநிலையையும் கோளாறுகளையும் கவனிக்காமல் கண்டு கொள்ளாமல் ஆசிரியர் பிள்ளைகளுக்கு கற்பிக்க முனைந்தால் ஆசிரியருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்காது. அப்போது ஆசிரியர் பிள்ளையிடத்தில் கடினமாகவே நடந்து கொள்ள முனைவர். பிள்ளை ஆசிரியரை விட்டு விலகி -பாடசாலையை விட்டு தூரமாகவே விரும்பும். நாளடைவில் அதுவே ஒரு அச்ச நோயாக மாறும். அதைத்தான் பாடசாலை அச்சநோய் எனக் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக இந்த அச்ச நோய் பாடசாலை மட்டத்தில் காணப்படும் அதேவேளை முஸ்லிம்கள் நடாத்தும் குர்ஆன் பாடசாலையிலும் அதிகம் காண முடிகிறது. குர்ஆன் பாடத்தை கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியர் (முஅல்லிம்) மிக மிக கடுமையாக பிள்ளைகளிடத்தில் நடப்பதால்தான் பிள்ளைகள் குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்ல பயப்படுகிறார்கள்.

ஒரு வகுப்பில் நாற்பது அல்லது ஐம்பது மாணவ மாணவிகள் இருக்கும்போது அந்த வகுப்பை நடாத்திச் செல்வதில்÷கற்பித்துக் கொடுப்பதில் ஆசிரியருக்கு பல சிரமங்கள் ஏற்படும். குறிப்பிட்ட 45 நிமிடத்தில் எல்லா மாணவ மாணவிகளுக்கும் கவனம் செலுத்தி கற்பிப்பதில் ஆசிரியர் மிகுந்த சிரமத்தை மேற்கொள்கிறார்கள். இவ்வேளையில் ஆசிரியருக்க திருப்திகரமான முறையில் பிள்ளைகள் படிக்கவில்லை என்றால் அல்லது நடந்து கொள்ளவில்லை என்றால் ஆசிரியர் பிள்ளைகளுடன் கடினமாக நடந்து கொள்வார். பிள்ளைகளுக்கும் ஆசிரியருக்குமிடையில் ஏற்படுகின்ற இந்த இடைவெளியினால் பாதிக்கப்படுவது நிச்சயம் பிள்ளைகள்தான். எனவே நாளடைவில் பிள்ளை ஆசிரியரைக் கண்டு -அவரது பாடத்தைக் கண்டு- பயந்து தூரமாகி விடுகிறது.

கற்பித்தல் துறைக்கு தயாராகும் ஆசிரியர்ஆசிரியைகளுக்கு Educational Psychology கற்றுக் கொடுப்பது இந்த நிலையை தவிர்ப்பதற்குத்தான். சகல வளங்களாலும் முன்னேற்றமடைந்த பாடசாலைகளில் ஒரு வகுப்பில் 30 அல்லது 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் கற்பிப்பது இந்த School Phobia வை தவிர்ப்பதற்கும் பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கற்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

siruvar_ulaviyal
children-psychology-tamil

இரண்டாவது தாயுடனுள்ள மிதமிஞ்சிய பிணைப்பு
(i) அதாவது பிறந்ததிலிருந்து தாயுடைய மடியில், அரவணைப்பில் வளர்ந்து வந்த அந்தப் பிள்ளை முதன் முதலாக தாயை விட்டு பிரிந்து (பாடசாலைக்குச்) செல்வதாலும் பயந்து அஞ்சுகிறது. அறிமுகமற்றவர்களுடன் கலந்துறவாடுவதை பயப்படுகிறது. தாயின் அன்பும் பாசமும் கிடைக்காமல் போகுமோ என்று அஞ்சுகிறது.

(ii) அதுபோல், பெற்றோரின் பிரச்சினை அல்லது விவகாரத்தின் காரணத்தால் பெற்றோர் பிரிந்திருக்கும்போது அதனால் தாயுடைய தந்தையுடைய பாச பிணைப்பு கிடைக்காமல் தவிர்க்கும்போது பிள்ளை உள ரீதியாக பாதிப்படைந்து விடுகிறது. அதன் காரணமாகவும் தாயைவிட்டு பிரிந்து செல்ல அஞ்சுகிறது.

இந்தப் பயம் அச்சம் ஆரம்ப காலம் (முதலாம் ஆண்டு முடியும் வரை) சிலவேளை காணப்படலாம்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.