Tuesday, February 4, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புகுழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் வரலாறு ஜூன் 12 World Against...

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் வரலாறு ஜூன் 12 World Against Child labour in tamil

- Advertisement -

child labour குழந்தை தொழிலாளர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று, உலகெங்கிலும் சுமார் 100 நாடுகளில் குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

- Advertisement -

ஆய்வுகளின்படி, உலகளவில் ஒவ்வொரு 10 குழந்தைகளில் ஒருவர் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். எனினும் இந்த விகிதம் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) கருத்துப்படி, உலகளவில் சுமார் 152 மில்லியன் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர், அவர்களில் 72 மில்லியன் பேர் ஆபத்தான நிலையில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

child labour in tamil
child labour in tamil

குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாடு எண் 182ன் உலகளாவிய ஒப்புதலுக்குப் பிறகு இது முதல் உலக தினமாகும்.

- Advertisement -

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த ஆண்டின் கருப்பொருள் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கான 2021 சர்வதேச ஆண்டிற்கான தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

- Advertisement -

இந்த ஆண்டில் குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த உலகளாவிய புதிய புள்ளிவிவரங்களை வெளியிடுவதன் மூலம் ஜூன் 12 முதல் “வீக் ஆப் ஆக்சன்” கடைப்பிடிக்கப்பட உள்ளது.
உலகளாவிய தொழிலாளர் சமூகத்தை ஒழுங்குபடுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002ம் ஆண்டில் நிறுவியது.

இதன் மூலம் 5 முதல் 17 வயது வரையிலான பல குழந்தைகளுக்கு தகுந்த கல்வி, மருத்துவ சேவைகள், ஓய்வு நேரம், அடிப்படை சுதந்திரங்களை வழங்குவதை உறுதி செய்ய அமைக்கப்பட்டது.

இந்நாளில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையாக நடைபெறுகிறது.

child labour in tamil
child labour in tamil

குழந்தைத் தொழிலாளர் தொடர்பான சர்வதேச பிரச்சினைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தீர்வுகளை உருவாக்குவதற்கும் ஜூன் 12 குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை என்பனவாகும்.

அந்த உரிமைகளை அவர்களிடமிருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் பேணும் வகையில், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

kidhours – Child labour

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.